வியாழன், மே 20, 2010

I.DON.LOVE.STORY

April 12 2008 – Monday

“Is it on Monday? Can I make it around 10 am? Perfect! Sounds good!”

“அப்பா, திங்க கிழமை, சென்னைல final interview ku வர சொல்றங்க!..இப்படி திடு திப்பு நு சொன்னா என்ன பண்றது? டிக்கெட்ஸ் வேற book பண்ல, ஞாயித்து கிழமை வேற, சத்தியமா டிக்கெட் கிடைக்காது!.. இப்படி அவன் பாட்டுக்கு புலம்பி கொண்டிருந்தான் இனியன்.

இனியன்! ரொம்ப நல்லவன்!..தண்ணி, தம்முனு எந்த கேட்ட பழக்கமும் கிடையாது..அதனால அவனே அவன நல்ல பையன்னு நினசிப்பான்..நெறைய friends..செம வாய்..ஆமாங்க கொஞ்சம் நல்ல பைய்யனும் கூட..

“கண்ணு, என்ன முடிவு பண்ணிருக்க? எப்ப போக போற?”இது இனியனோட அப்பா.

“தெரிலன்கப்பா! டிக்கெட் கிடைக்குதான்னு பாப்போம், இல்லனா அப்புறம் unreserved la ஏறி போய்ட வேண்டியது தான்”.

“சரி, எதா இருந்தாலும் சீக்கிரம் முடிவு பண்ணு!”

April 13 2008 – Sunday

Erode railway station.

“டே பிரவீன்! கேக்குதா?

இல்ல இல்ல..டிக்கெட்ஸ் கிடக்கல..unreserved ல தான் வரேன்..

காலைல ரீச் ஆனதும் உனக்கு போன் பண்றேன்..

சரிட, Bbye!”



Train ஈரோடு ல இருந்து கிலம்பரதால..பெருசா ஒன்னும் rush இல்ல..ஆனா சீட் இல்லாத அளவுக்கு கூட்டம்..அங்க இங்க தேடி, கடைசில கூட்டம் கம்மி அஹ இருந்த ஒரு பெட்டில ஏரிகிட்டான். அப்படி train ல போறது அவனுக்கு புதுசு..


Railway stationukkae உண்டான இரைச்சல், announcement, டிபன் விக்கிற கூட்டம், டி காபி smell nu, trainla பயணிக்க வேண்டிய அத்தன அம்சமும் அவன் கூட இருந்தது..

இவன் நின்னுட்டு இருந்த சீட் கு opposite ல, இவனுக்கு தெரிஞ்ச ஒருத்தர், வேற ஒருத்தர் கூட சீரியஸ் ah பேசிட்டு இருந்தார்..அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணின வுடனே பேசலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தான்..


“ஹலோ சார், நீங்க பாலா முருகன் தானே?” என்ன ஞாபகம் இருக்க?


“ஆமா! எனக்கு கூட எங்கயோ பார்த்த மாரி இருக்கு, ஆனா சரியாய் ஞாபகம் வரல!”


“ சார், நீங்க BJ ல வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ, நாங்கல்லாம் அங்க ட்ரைனிங் வந்தோமே ? என் பேறு இனியன்”


“right! Right! ஒரு நாலு பேறு வந்திங்க இல்ல? ஆமா என்ன இப்படி வெயிட் போட்ட? அடையாளமே தெரில!”


“ ஹி ஹி, என்னன்னு தெரிலங்கன்னா கொஞ்சம் ஒடம்பு வருது..இத்தனைக்கும் அதிகமா சாப்பிட கூட மாட்டேன்”…. கொஞ்சம் பேச ஆரம்பிச்ச வுடனே, ஒரு comfort zone காக ‘அண்ணா’ போட்டு பேச ஆரம்பிச்சான்.


“இனியா, டீ? மூணு டீ!” சொல்லிடு தான் சட்டை பைல இருந்த இருபது ரூபா நோட் எடுத்து கொடுத்துட்டே கேட்டார்.


“ஹ்ம்ம்… அண்ணா காபி குடுங்க”


“அப்புறம் மத்த பசங்க லம் என்ன பண்றாங்க? நீ என்ன பண்ற? என்ன சென்னை விசிட்?”

“நான் இப்போ வொர்க் பண்ணிட்டு இருக்கேன்! சென்னைல ஒரு buying house interview! Naalaikku வர சொல்லி, நேத்து தான் கால் வந்துச்சு..அதான் இப்படி அடிச்சு புடிச்சு, ஸ்டான்டிங் ல ..” சொன்னான் காபி ah குடித்துகொண்டு.


“குட்! நீ இங்க ஒக்கந்துக்கோ, இவரு என்ன வழி அனுப்ப வந்தவரு! இப்போ கிளம்பிடுவாரு. “சரி ரமேஷு, நீ கிளம்பு! அப்புறம் ‘மீனா’ வ கொஞ்சம் சொல்ற பேச்ச கேட்டு நடந்துக்க சொல்லு! நான் போய் சேந்துட்டு போன் பண்றேன்”


“அட பாவிகளா, வழி அனுப்ப வந்தவன் லாம் ஒக்காந்து பேசிடிருககன்..train ல travel பண்ற நாங்கெல்லாம் நிக்கனுமா? ‘மீனா’..சத்தியமா வழி அனுப்ப வந்தவனோட wife ah தான் இருக்கணும்..’இந்த ஆளு எதுக்கு? அவன் பொண்டாட்டிய ஒழுங்கா இருக்க சொல்றன்? என்ன கொடுமை சரவண் இது? என்னமோ, நமக்கு சீட் கிடைச்சது, இனி train போய் சேற்ற வரைக்கும் இவரு தான் நமக்கு அண்ணா!”


ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுல, ரெண்டு பேரும் ஒருத்தர பத்தி ஒருத்தர் பரஸ்பர விசாரிப்புகளோட முடிசிகிட்டங்க.. train கிளம்பற வரைக்கும் டைம் பாஸ் பண்றதுக்காக SMS மொக்கை ஆரம்பிச்சான் இனியன்.


நல்ல வேர்த்து..ஈரமா இருக்கும் பொது train கிளம்பினா எப்படி இருக்கும்? சில்லுன்னு ஒரு காத்து தான் ஒடம்பு முழுக்க பரவி தன்ன அரவணைப்பதை அப்படியே சுகித்து கொண்டிருந்தான். இந்த அனுபவத்த நம்மல விட இனியன் நல்லா சொல்லுவான்.

இனியன் பேசறான்

“நல்ல காத்து! மனசு ரொம்ப லேசா இருந்தது.. எந்தவித கவலையோ பயமோ இல்லாம புதுசா பொறந்த மாரி இருந்துச்சு., அப்படியே titanic ஹீரோ மாரி feel பண்ணிட்டு இருக்கேன்..அப்போ யாரோ என்னை உத்து உத்து பார்த்துட்டு இருக்காந்க, திரும்பி பார்தா! எனக்கு opposite சீட் ல ஒரு பொண்ணு அவங்க familyoda ஒக்கந்துருக்கு..

ச ச.. அப்படி ல்லாம் இருக்காது..அந்த பொண்ணு வேற யாரையாவது பாத்துருக்கும் னு மறுபடியும் feel பண்ண ஆரம்பிச்சேன்..திரும்பவும் அதே நெருடல்..அதே திருட்டு பார்வை..கண்டிப்பா இந்த முறை அவ நம்மல பார்க்கும் பொது கையும் களவும புடிக்கணும் னு முடிவு பண்ணி, டக்குனு திரும்பி பார்த்தேன்..


என்னோட இந்த திடீர் செயலால அவ கொஞ்சம் தடுமாறி போயிட்டான்னு தான் சொல்லணும்..என்ன பண்றதுன்னு theiryama, பொன்னுங்கலுக்கே உண்டான நமுட்டு சிரிப்போட என்ன பார்த்துட்டு தலைய குனிஞ்சிகிட்டா..


உண்மையா சொல்றேன், தீர்க்கமான பார்வை அது..என்னா ல அந்த பார்வை யா முழுசா ஜீரணிசிக்க முடியல..என்ன ரொம்பவே நிலை குலைய வெச்சுடுச்சு..


“ஸ்வேதா! காபி வேணுமா?”


“இல்லமா, நீங்க குடிங்க! எனக்கு வேண்டாம்!”


“ஏண்டி, இன்னைக்கு கமலா அத்தை கட்டிருந்த சேலை ரொம்ப அழகா இருந்தது இல்ல! உனக்கும் அந்த மாரி ஒன்னு வாங்கணும்”


“போங்கம்மா, எனக்கு சேலை லாம் வேணாம், நம்ம ‘சுமா’ அவ அக்கா கல்யானத்துல போட்ருந்த கம்மல் பார்த்திங்களா? எனக்கு அது மாரி ஒரு செட் வேணும்!”


“யே! ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்தா என்னோட மண்டைய உருட்டுவிங்கலே..இதுக்கு தான் உங்கள எல்லாம் வெளியவே கூட்டிட்டு வரது இல்ல!”


“ஆமாங்க, உங்க கிட்ட கேக்காம ttr கிட்டயா போய் கேக்க முடியும்?” அவளோட அம்மா, செம timing கவுன்ட்டர் கொடுத்ததா நினைச்சிகிட்டு வெக்க பட்டு சிரிகிறங்க..


“பாத்தியா? உங்க அம்மாவுக்கு கொளுப்ப?” தன் மனைவி அடிச்ச ஜோக் கு அவரு ரொம்பவே பெருமை பட்டுக்கிட்டரு.


“சரி போதும்! எல்லாரும் பார்குரங்க..ரெண்டு பேரும் பேசாம வாங்க.” நான் அத பார்த்து சிரிக்கறது

அவளுக்கு புடிக்கல போல.


இப்படி அவங்களுகுள்ளன conversation எனக்கு ரொம்பவே உதவி யா இருந்துச்சு..நான் அவள பார்த்தேன்..பார்த்துட்டே இருந்தேன்..அவ ரொம்ப அழகெல்லாம் இல்ல..ஆனா கொரைன்னு சொல்றதுக்கு அவ கிட்ட எதுவும் தோனல.. ரெண்டு நாள் முன்னால தான் threading பண்ணிருப்பா போல, அவ்ளோ திருத்தமான புருவம்..அதுக்கு போட்டிய அவளோட கண்ணு..அழகான கண் மட்டும் இல்லனா, இந்த பொன்னுங்கள நினச்சி கூட பார்க்க முடியல..


எங்கயோ வாங்கின வளையல், கம்மல், கழுத்துல எதோ pootrunthaa..எல்லாம் அவளோட பீகாக் கிரீன் chudikku மேட்ச் ah இருந்த்தது..அப்போ அப்போ..முன்னால விழர் அவளோட முடிய எடுத்து விடற சகுல அவ என்னா ஒரக்கணால பார்த்தது இப்பவும் கிளாஸ். ஒரு 1100 நோக்கியா hand செட் வெச்சிருந்த..அவளோட ரெட் கலர் நைல் polish போட்ருந்த விரல் அதுல விளையாடினத பார்த்த போது தான், அந்த மொபைல் எனக்கு செம cute model ah தோனுச்சு..


என்னோட testrosterone ல்லாம் அன்னைக்கு தான் முழுசா வேலை பாத்தது..அவளுக்கும் அதே மாதிரி தான் னு நினைக்கிறேன்.. ofcourse, இந்த harmones பண்றது தான, என்ன இவ்ளோ feel பண்ண வெச்சிருக்கு..


ஒரு one hour போயிருக்கும்..ரெண்டு பேரும் பேசவே இல்ல..ஆனா நெறைய பேசிகிட்டோம்..


‘எவ்ளோ நேரம் தான் பார்துட்டெ இருக்கறது?’ நான் என்ன இதயம் முரளி ah?

அந்த நிமிஷம் நான் என்ன பண்ணினேன்? ஏன் அப்படி லாம் பண்ணினேன்? இதுக்கெல்லாம் சத்தியமா என்கிட்டே பதில் இல்ல...இந்த பொண்ணுங்கள பாத்த வுடனே சீன் போடறது, அதெல்லாம் நான் இல்ல..அவள இம்ப்ரெஸ் பண்றதுக்கான ஒரு ‘ம’வும் கிடையாது.. “ஏன்னா? நான் பொண்ணுங்க கிட்ட ஜோவியல் அப்படின்னு மச தனமா கடலை போடறவன்”ஆனா இவ கிட்ட என்னால அப்படி அப்ப்ரோச் பண்ண முடியல..


இப்படி மனசுக்கும், science கும் நடுவுல இருந்த போரட்டதுல, அவ செல் no கிடச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. டைரக்ட் ah கேக்கலான, வில்லன் மாரி கூட குடும்பமும் ஒக்கந்துருக்கு..ரொம்ப புத்திசாலி தனமா ஒரு காரியம் பண்ணினேன்..ஆமா, பத்து நிமிஷம் கழிச்சு alarm வெச்சுட்டு, அந்த கால் attend பண்ணும் பொது, அப்படியே மொபைல் ah silent mode கு மாத்திட்டு..


“சொல்லு பிரவீன், …ஆமா train கிளம்பிடுச்சு..ஒரு half an hour ஆச்சு..சேலம் கிராஸ் பண்ணி..”


“இல்லைட, அடுத்த ஸ்டேஷன் ல தான் எதாவது வாங்கி சாப்டனும்..ஹ்ம்ம்..ஹ்ம்ம்..ஹ ஹ ஹ..ஹ்ம்ம்..ஹ ஹ ஹ”


“யே, இல்ல இல்ல, காலைல வந்து சொல்றேன்..இத பாரு என்னோட இந்த no கிடைக்கலான..call me on the other no..airtel..9865250612..ஓகே?” இரு ..இரு..repeat பண்றேன்.. 9..8..6..5..2..5..0..6..1..2”


என்கிட்டே இருக்கறது என்னவோ ஒரு no தான், எனக்கு வேற வழி தெரில.. நியூட்டன் is right! “To every action, there is an equal and opposite reaction”…though she did not pay attention or looking at my side, I saw her fingers typing my no in her mobile. Thank God! I was pretty sure that this would happen. And that is why? I gave certain pause and gaps between each no I repeated. OPERATION SUCCESS!!

Though the operation was success, it took time for my mobile to sound tick..Yes.

I got an sms from a new no after 10 mins......

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...