"ஸ்வேதா, எப்போ டா வந்தா?"
"இன்னைக்கு காலைல தாண்டா! நைட் கிளம்பிடுவா.."
"நகு, எனக்கு ஒன்னும் புரிலடா, ஸ்வேதா வர்றதும் தெரியாது.. இந்த பொண்ணுங்களுக்கு என்ன சம்மந்தம்? ஸ்வேதா எண்ட்ட ஏன் இவள தெரியாத மாறி நடந்துக்கணும்? ஒரே குழப்பமா இருக்கு டா.."
"அத விடுடா பார்த்துக்கலாம்.. ஆமா நீ கல்யாணத்துல சாப்டியா இல்லையா? இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட!"
"இல்ல நகு சாப்டல.. மனசு சரில அதான் உடனே வந்துட்டேன்., நீ ஏன் சீக்கிரம் வந்துட்ட.. படம் முடிய எப்படியும் பதினோறு மனியாச்சும் ஆகுமே.."
"இல்ல.. அது வந்து..சரி நான் உனக்கு சாப்ட எதாச்சும் வாங்கிட்டு வரேன்.." நீ ரெஸ்ட் எடு.. போன் உண்ட இருந்தா நீ பேசிட்டே இருப்ப.. நான் எடுத்துட்டு போறேன்.. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. " என கூறிவிட்டு நகு பைக் சாவியையும் தலைகவசத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்..
நகு உம் ஆனந்தும் கல்லுரி நண்பர்கள். நெருங்கிய நண்பர்கள தான் ஆனா அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டதும் அவங்க நட்பு ஆனதும் இவங்க ரெண்டு பேருக்கும் புலப்படாத விசயம்.. ஆனந்த், படித்தது வேறு co-ed ஆயிற்றா. பெண்களிடம் சரளமாக பேசகூடியவன். தன் மாமா பெண்களிடம் விளையாடியே, அவனுக்கு பெண்களை கண்டால் பெரிதாக வெக்கமோ கூச்சமோ வராது.. வெக்கம் இவனை கண்டால் நாணி ஓடி விடும் அளவிற்கு அண்ணன் மகா கடலை மன்னன்.. கல்லூரியிலும் அப்படித்தான்.. அனால் நகு இவனுக்கு நேர் எதிர்.. படித்தது பாலகர் பள்ளியில்.. டிப்ளமோ பட்ட படிப்பை முடித்துவிட்டு lateral entry ஆக கல்லூரிக்கு சேர்ந்தவன்.. பெண்களிடம் அதிகம் பழகாதவநாளோ நகு விற்கு ஆனந்தையும் அவனது தோழிகளையும் சற்றும் பிடிக்காது...
இருப்பினும் விதி வலியது ஆயிற்றே.. இவர்கள் நண்பர்களாகி போனார்கள்.. நகுவிற்கு முன்பே ஆனந்த் மற்றும் அவனுடைய வகுப்பு தோழர்கள் வேலை கிடைத்து சென்று விட.. நகு மட்டும் சில நாட்கள் கழித்து பெங்களுரில் ஒரு வேலைக்கு சேர்ந்தான்.
இன்றிலிருந்து சில மாதங்களுக்கு முன்னால்..
"டே நகு, எப்டி இருக்க? நான் அடுத்த வாரம் பெங்களூர் வரேன்.. ஆபீஸ் வேலையா தான்.. 3 நாள் இருப்பேன்.. வந்துட்டு கால் பண்றேன்"..
"ஓ சூப்பர் டா! அப்போ இங்க வந்துடு.. இங்கயே தங்கிக்கலாம்"
"இல்லடா நான் ஸ்கூல் friend சிவா கிட்ட அங்க வர்றதா சொல்லிருந்தேன்... அங்க போய்டுறேன்.. வரும் போது கூப்டறேன்...என்ன?.. சரி நகு வெச்சுடுரேன். bye"
Tin Factory, Kasthuri Nagar Lay out, neram 07 00 PM.
சோடியம் லாம்ப் ஒளியில் கஸ்துரிநகர் லே அவுட் தகித்து கொண்டிருந்தது.. காதில் பெங்களூர் குளிர் ஈட்டி கொண்டு குத்தியது.. மெர்குரி லாம்ப் ஒளியில் மின்னும் கண்ணாடி சூப்பர்மார்க்கெட்கள்; மனம் பரப்பிகொண்டிருக்கும் சோளத்தின் ஆவி குளிரின் தாக்கம் தாங்காமல் அங்குமிங்கும் அல்லாடியது..ஆங்காங்கே கன்னைச்சிமிட்டும் இரண்டு சக்கர வாகனனங்கள்; அதனில் ஓட்டியே பிறந்தது போல் ஆணின் பின் பெண்கள் அமர்ந்து அவன் காதில் எதோ பேசிகொண்டே போனால்..பார்பவர்கள் நிச்சயம் அவள் முத்தமிட்டுருக்க வேண்டுமென்று தான் நினைப்பார்கள்..4 road ஜங்ஷன் அது.. அங்குமிங்கும் ஆண்களும் பெண்களும் சார்சாரையாய் சென்று கொண்டிருந்தார்கள். ஆண்களில் பெரும்பாலானோர் ஷர்ட் பான்ட் அணித்து மேல் ஒரு ID card அணிதிருன்தனர்.. பெண்கள் ஒரு sweater போட்டு அதன் மேலே துப்பட்டாவை அணிந்திருந்தனர்.தனியே நின்றிருந்த ஆனந்துக்கு ஒரு கை டீயும் மற்றொரு கை சிகரட்டும் கதகதப்பூட்டி கொண்டிருந்தன. பெங்களூருவின் அழகை ரசித்து கொண்டிருந்தவன் கண்களில் வெண்திரை பணியை தாண்டி அவன் நண்பன் நகு வந்து கொண்டிருப்பது புலப்பட்டது..
"வா டா.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"
"இல்ல நகு, ஒரு 15 நிமிஷம் தான் இருக்கும், எப்படி இருக்க? வேலை லாம் எப்டி போது?"
"நல்லார்க்கேன் டா.. வேலை போகுது.. அப்புறம் என்ன? சாப்டியா? நா சாப்டேன்..போகும் போது எங்கயாச்சும் உனக்கு வாங்கிட்டு போய்டலாம்"
இதை அவன் சற்றும் எதிர் பார்கவில்லை.. சரி இவனுக்கு வேறு எதாவது வேலை இருந்துருக்கும் என நினைத்துகொண்டு அவன் வண்டியில் அமர்ந்து சென்றான்.
"என்ன டா இங்க ரோடே போட மாட்டனுகளா? இப்படி குண்டும் குழியுமா இருக்கு?"
"பெங்களூர் வெளில பார்க்க தாண்டா ஷோவா இருக்கும்..உள்ளுக்க இப்படி தான். நாய் பொழப்பா இருக்கும்."
"புரியுது புரியுது.. செருப்ப இங்கயே கலட்டி விடவா... உள்ள விடவா...
ஹ்ம்ம். நல்லாருக்கு டா வீடு.. ஒருத்தனுக்கு சரியா இருக்கும்.. எவ்ளோ ரெண்ட்?
பரஸ்பர விசாரிப்புகள்.. கல்லூரி புரளிகள்.. இப்படி நெறைய கதைகள் பேசி பேசி ஒருத்தர்கொருத்தர் பற்றி பேச ஆரம்பித்தார்கள்..
"டே நகு.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. பேறு ஸ்வேதா..
"காதல் - அவளும் அவள் சார்ந்த இடமும்; எப்படி?"
"முடில டா.. எப்படி டா? காதலிக்க ஆரமிச்ச்சவுடன் கவித எழுதறீங்க?"
"இன்னொன்னு கேளு ..
முக்காலத்தையும் உணர்த்துமெனில் காதல் கூட ஒரு வினையெச்சம் தான்"
"அப்போ பொண்டாட்டிங்க?"
"அவங்க ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் "; ஹ ஹா ஹா ..
"ஹ ஹா ஹ ஹ ஹா , "எப்படி டா பழக்கம்? எங்க பார்த்த?"
""train ல தான் மொதமொத பார்த்தேன்.. நல்ல அழகு.. சென்னை ல வொர்க் பண்றா.. "
"""டே train ல பார்த்த உடனே லவ் பண்ணுதுனா, எனக்கு இது சரியா படல.. எதுக்கும் ரொம்ப சீரியசா இருக்காத.. பார்த்து டீல் பண்ணிக்கோ"
இந்த பதிலை நிச்சயம் ஆனந்த் எதிர்பார்க்கவில்லை. இவனிடம் இனி தன காதல் அனுபவத்தை சொல்வது பயனில்லை என முடித்து விட்டான்..
மறு நாள் காலை:
"சரி நகு, நான் கிளம்புறேன்.. சென்னை வா ஒரு weekend .. உனக்கும் ஒரு change ஆ இருக்கும்.. bye da .. TC."
நிகழ் காலம்:
கிர்ர்..கிர்ர்ர்..என அழைப்பு மணி சற்றே கண்ணயர்ந்த ஆனந்தை எழுப்ப.. யார் என பார்க்க.. கதவை திறந்தவனுக்கு அங்கே ஒரு அதிர்ர்ச்சி காத்திருந்தது..
"can I come in?" இனிய குரலில் குதிரை வால் பின்னியிருந்த ஒரு பெண், இவனது அனுமதி கோரி வெளியே நின்றிருந்தால்... ஆம் அவள் யது நந்தினி என தனை நேற்றிரவு அறிமுக படுத்திகொண்ட அதே பெண் தான்..
"ப்ளீஸ் கம் இன்"
"தேங்க்ஸ்..How was ur day?"
"yeah.. de day was quite good.. but you .. wr wr u this entire day? u knw wt?? I am in a problem.. i need ur help.." என இவன் தட்டு தடுமாறி பேசுவதற்குள், இடை மறித்தவள் ..
"u seem to be restless? R u ok? என வினவிக்கொண்டே தன கம்மலை சரி செய்து விட்டாள்.
"Yeah I am ok.. Lil Tired.. but otherwise.. things are..naa naa normal".. என தொண்டை எச்சில்லை விழுங்கினான்..
"Fine then! I shall take leave, Don Forget,, u promised for a dinner" கண் சிமிட்டு விட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் சென்றால்.
இவள் யார்? எதற்காக என்னிடம் இப்படி ஒரு நாடகத்தை ஆடுகிறாள் என குழம்பியவன் . கண நேரத்தில் உதித்த யோசனையால் அவளை கூபிடலானான்..."ம்ரிது ..ம்ரிது ..ம்ரிது மஞ்சரி.." என ஆனந்த் அழைக்க, வாசல் அருகே சென்று கொண்டிருந்தவள், மெதுவாக திரும்பி "ஆனந்த், எதாவது சொன்னிங்களா? என வினவ.. "Nothing..நான் உங்கள கூப்டு பார்த்தேன்"
"அதுக்கு, நீங்க யது.. யது நந்தினி னு கூப்டனும்.. நைட் தான சொன்னேன்.. அதுக்குள்ள என் பேர மறந்துட்டிங்களா? என்று கூறி சென்றாள்..
அப்போது வந்த நகு, ஒரு பெண் ஆனந்தை பார்த்து செல்வதை பார்த்தான்.. மிக பரிச்ச்சயம்கிய ஒரு உருவமாக தெஇயவஈ வேக வேகமாக சென்று பார்த்த அவனுக்கு ஆச்சரியம் ஆட்டுக்கல் போல் அமர்ந்திருந்தது..
"டே ஆனந்த்! இந்த பொண்ண எப்டி டா உனக்கு தெரியும்? அவ எதுக்கு இங்க வந்துட்டு போறா?"
"நகு, என்ன சொல்ற.. ம்ரிது மஞ்சரிய உனக்கு தெரியுமா? எப்டி டா? நான் சொல்லிடு இருந்த பொண்ணு இவ தான்"
"என்னது? என்ன டா ஒளர்ர? அவ பேறு யது நந்தினி டா!!!!
தொடரும் ...