ஞாயிறு, ஜூன் 07, 2020

KING SIZE [18+]


"உங்களுக்கு என்ன? நல்லா சோக்கா வர்றிங்க.. வாரவியலும் நல்லா டிப்டாப்பா இருக்காய்ங்க.. " ஆனா என் நிலைமைய  பாத்தியலா.. வெத்தல பாக்கு போட்ட வாயில என்ன வெச்ச்சு, பத்த வைக்கிறாங்க.. நானே நாறுவேன்.. இதுல அவிய நாத்தமும் சேந்து.. கொமட்டறாப்ல வருது ராஜா..."

இப்படி பொலம்பிட்டே இருந்தான் காஜா. அவன் சொல்றதும் கரெக்ட் தான்,, "These guys never got a chance to get exposed" to any better circle. காஜா கூட அடிக்கடி சொல்லுவான்.. "நீ நல்ல, இங்கிலிஷ் பேசுறபா ". ஆமா, அது வாஸ்தவம் தான்.. நான் நெறைய வார்த்தை கத்துக்கிட்டேன்.. ஆபீஸ் ல use பண்ற வார்த்தைலாம் எனக்கு அத்துப்படி.. இந்த சேல்ஸ் personலா சொல்ற, "Target, Month end Pressure, Depression, Stress" அப்டி இப்டி னு நெறைய சொல்லுவேன். ஆனா எதுக்கும் எனக்கு அர்த்தம் தெரியாதுனு, காஜாக்கு தெரியாதே.. 
But, ஒன்னு நல்லா தெரிரியும்.. இத சொல்றப்போலாம், என்ன பின்னால நல்லா இழுப்பாங்க.. எனக்கு மூச்சு முட்டி, வேகா வேகமா எரியுவேன்.. உடம்பெல்லாம் எரியும். அத பத்திலாம் They never care. அதுசரி, அவனை பத்தியே அவன் கவலை படல.. இதுல என் உடம்பு பத்தி அவனுக்கு என்ன.. யாரோ, "முகேஷ் னு ஒருத்தன் படத்துலலாம் வரான்.. அவன் நமக்காக பேசுறான்.. இனிமே நம்மள யாரும் எரிக்க மாட்டாங்கன்னு" லாம் இந்த காஜா சொல்லிட்டு இருந்தான்.. ஆனா வந்தவங்க எல்லாம் அந்த முகேஷ கிண்டல் தான் அடிச்ச்சாங்க. அவன் இந்நேரம் அவமானம் தாங்காம செத்துருப்பான்.. 

இந்த காஜா தான், பொழுதுக்கும் பொலம்புவான்.. எதோ என் பேர "King Size"னு வெச்சிட்டதால, என் வாழ்க்கையே... ராஜா மாரி இருக்குதுனு.. என்ன வாங்கி குடிக்கிறவங்க நிலைமை தான் எனக்கும்.. வெளியே பளபளன்னு வெள்ளையும் சொள்ளையுமா இருந்துட்டு,, உள்ள வெறும் குப்பையை வெச்சு, வெந்தே சாகனும்.. அது மட்டுமா? பண்றது எல்லாம் பண்ணிட்டு, கடைசில கீழ போட்டு மிதிப்பாங்க.. மனுஷன் வாழ்க்கையும் அப்டி தன போல பாவம். 
 
                                                     ஆனா, இருக்குற இடத்தை பொறுத்து கூட எங்க வாழக்கையும் சமயத்துல நல்லா இருந்துருக்கு.. போன மாசம், என் friend, Iceburster தான் சொன்னான், "நா காலேஜ் இருக்க ஏரியா தான் மாப்ள டெலிவெரி ஆக போரேன்.. அங்கெல்லாம் நம்ம பசங்க சும்மா சீன் போடுவானுங்க.. பொண்ணுங்க பாக்குதுனே, நம்மள ஸ்டைலா ஊதுவானுங்க.. போகைல ஆர்டீன் உடுவானுங்க. அதெல்லாம் வேற பீல்றா மாப்ள.." இந்த மாப்ள, சீன், ஸ்டைல் இதெல்லாம் அவன் இருக்க ஏரியா  டூட்ஸ்  சொல்லுவாங்களாம். எனக்கும், "நம்ம கூட, போயிருக்கலாமே" னு பீலிக் ஆஹ் இருக்கும். ஆனா, அன்னைக்கு ஒன்னு சொன்னான் பாருங்க.. அங்க தான், எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு.. பொண்ணுங்க கூட Iceburster  கேக்குதாம். அதுல போன முறை, ஒரு IT பொண்ணு போட்டுட்டு வந்த லிப்ஸ்டிக் ல இவனுக்கு ரெட் shoe  போட்ட மாரி ஆய்டுச்சாம்.. நல்ல mouth spray ல இருக்குறதால, பரவால்ல.. பொண்ணுங்க தம் அடிக்கட்டும்னு விட்டுட்டானாம்..  
                                                  என்னமோ, இதெல்லாம் என்னால பாக்க முடியாது.. எங்க தாத்தா காலத்துல... கிழவிங்க தான் எங்கள, நெறைய வாங்குங்களாம்.. தொங்கட்டான ஆட்டிகிட்டே வாங்கிட்டு போவாங்கலாம்.. அப்போலாம், எங்க தாத்தாபாட்டியா, சுருட்டு னு தான் கூப்டுவாங்கலாம்.. எங்க தாத்தா பேரு கூட, ரதம். நல்லா கறுப்பா, கட்டையா இருப்பாரு.. அவர்கிட்டயே யாரும் போக முடியாது.. இப்போ என்னடானா, சிள்வண்டுலாம் என்ன வாங்கிட்டு போய் மறைஞ்சு கூட குடிக்குறது இல்ல.. open uh அடிக்குதுங்க.. கூட என்ன மாறியே மாரிஜூஆனா ஹாஷிஸ் னு எங்களோட உயர் ஜாதிய வேற சேத்து பத்த வைக்குறாங்க.. எங்க ரெண்டு ஜாதிக்கும் ஒத்துக்காது.. ஓவர் புகைச்சலா இருக்கும். இந்த பசங்க அதுல போதை ஆய்ப்பானுங்க..
                       இன்னும் என்ன எல்லாம் பாக்கணும்.. எனக்கு ரொம்ப நாளாவே மனசுல இது ஓடிட்டு இருக்கு.. என் நம்ம வாழக்கை இப்டியே இருக்கு.. எங்களை மாரியே ஒரு கூட்டம்., இல்ல இல்ல... அவங்கலாம் புண்ணியம் பண்ணினவங்க போல .. அவங்களும் நெருப்புல தான் எரியுறாங்க.. எங்கள மாரி.. புகை தான் விடறாங்க.. ஆனா, நல்ல வாசனையா இருக்கு.. எப்போதும் சாமி பக்கத்துல வெச்சிடுறாங்க.. கை  எடுத்து கும்புடுறாங்க.. 
                                 எங்களை பத்த வைக்கும் பொது, குனிஞ்சு கை  கூப்புறத்துக்கும் அவங்கள பத்த வைக்குறப்போ கை கூப்புறத்துக்கும்  எவ்ளோ வித்தியாசம். என் இந்த மனுசங்க ஒரே மாரி ரெண்டு விஷயத்தை வேறு மாரி பாக்குறாங்க?

 எனக்குள்ள இருக்கு அழுக்கு, அந்த ஊதுபத்தில இல்லையே அதுனாலயா? புரியல.. தேடிட்டு இருக்கேன்.. வெளிய வெள்ளையா  இருந்தாலும்.. நா உள்ள அழுக்கா இருக்கேன்.. ஆனா ஊதுபத்தி, வெளில கருப்பா இருந்தாலும் உள்ள ஒன்னும் இல்லாம.. இறை பணிக்கே தன்னை அர்பணிச்சிக்கிட்டான். அதுனாலயா.. 

ஒன்னு உறுதியா சொல்ரேன்..சும்மா கொஞ்ச நேரம் உங்க வாயில இருந்து உங்க ரத்தத்துல கலக்குற எனக்கே, இவ்ளோ யோசனை வருதுன்னா?.. உங்க எண்ணமும் அதை ஒத்த உணர்வும் சரியா இருந்தா.. நீங்க கூட ஊதுபத்தியா.. இல்ல இல்ல.. ஆன்மீகவாத்ய கூட மாறலாம். 

"அண்ணா, ஒரு கிங்ஸ் ஒரு டீ" சொல்டாரு துறை. இதோ என் தலய பிடிச்சு அந்த பிஸ்கட் டப்பா மேல வெச்சிட்டான் நாயர்.. அந்த அரவிந்த், ID Card la, அப்டிதான் போட்ருக்கு.. இதோ, என் மேல தீய வெச்சிட்டான்.. நா எரிஞ்சிட்டே இருக்கேன்,, இன்னும் ஒன்னு ரெண்டு second தான் வாழ்க்கை..  உங்களுக்கு அப்டி இல்ல.. யோசிங்க.. 

- கோல்ட் பில்டர் கிங்ஸ் 

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...