சனி, மே 14, 2016

ஒரு விரல்! ஒரு புள்ளி! ... பல கேள்வி???

கடந்த ரெண்டு மூணு வாரங்களாகவே இந்த பதிவ போடணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. தேர்தல் நேரம் இல்லையா? அதான்... எனக்கும் அந்த FEVER  ஒட்டிகிச்சு.. இத்தன வருசமா "சினிமா, சீரியல்னு  சுத்திட்ட இருந்த உனக்கு என்னடா திடீர் அக்கறை?" னு  நீங்க கேக்கலாம்... உண்மை தாங்க.. அப்படி தான்  இருந்தேன்.. ஆனா அப்போ அப்போ எனக்குள்ள [நமக்குள்ள] இருக்க அந்த நெருப்பு சும்மா லேஸா பொறி மட்டும் போடும்.. சுத்தி இருக்க எந்த பொருளும் எரியாம இருக்கும் போது நம்ம தீப்பொறி மட்டும் என்னத்த செய்யும்.. ஆனா இப்போ, காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி மட்டையாகுர வரைக்கும் Whatsapp, facebook னு எதுல பாத்தாலும் என்ன மாரி ஒரு சாமானியனோட குமுறலும் ஆற்றாமையும் சுத்தி சுத்தி அடிக்குது... நம்மள மாரி நடுத்தர வர்கத்துக்குலாம் சிக்னல்ல வெயிட் பண்ணும் போதோ, ATM க்கு லைன் ல நிக்கும் போது தான் இந்த சமூக அக்கறைலாம் வரும்.. 

சரி, அத விடுவோம்.. எதோ அப்பப்போ இப்படி தோனுறதே நல்ல மாற்றம் தான.. நானும் ஒரு மாசமா மாத்தி மாத்தி ரெண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கு எதிரா பதிவுகள போட்டுட்டே இருக்கேன்.. எதோ என்னால முடிஞ்சது.. ஆனா, இன்னொருத்தர் வந்து மட்டும் என்ன கிழிச்சிடுவான்னு தோணுது.. அங்கங்க 300 கோடி புடிச்சாங்க.. 200 கோடி புடிச்சாங்கனு படிக்கும் போது ஆற்றாமையும் இயலாமையும் மாறி மாறி பல்லு இளிக்குது.. இப்போ இருக்குற அரசியல்வாதிகள பத்தி பொதுப்படையா மேலோட்டமா ஒரு கருத்த முன் வைக்கலாம்னு நெனைச்சா, அதுக்கு உண்டான அடிப்படை அறிவு சுத்தமா இல்ல.. ஆபீஸ்லலாம் பிரச்னை பண்றவன "அரசியல் பண்றான், சரியான அரசியல் வாதி" இப்படி சொல்லி சொல்லி, அரசியல் னா எதோ தப்பான விஷயம் மாரி மனசுல பதிஞ்சிடுச்சு.. உண்மைலயே அரசியல் னா என்ன? மக்கள் சேவையா, இல்ல மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள அமைச்சுதற்ற அமைப்பா? .. நிசமா புரியல?.. சரி! அப்படி ஒரு அமைப்பு தான் அரசியல் வாதிங்கனு வெச்சுப்போம்.. ஆனா, மக்களோட பங்களிப்பு.. இல்ல இல்ல ஒத்துழைப்பு இல்லாம எப்படி ஒரு அமைப்பு இயங்க முடியும்..

ரோடு ல நடந்து போறோம் accident ஆகி கிடக்குறாங்க, தாண்டி தான் போறோம்.. Brush பண்றப்ப தண்ணி பைப்ப முழுசா தொறந்து வுட்டுட்டு தண்ணிய வீனடிக்குறோம்.. வீட்ல எல்லா லைட் அயும்  போட்டு விட்டுட்டு அப்படியே இருக்கோம்.. இதலாம் பண்ணினா நல்லாட்சி அமைஞ்சிடுமானு கேட்டிங்கனா, சத்தியமா எனக்கு தெரில.. இப்படி ப்ளாக்ல ஒக்காந்து பக்க பக்கமா டைப் பண்ணிட்டு இருக்கனே, அப்போவாச்சும் நீங்க அந்த முடிவுக்கு வந்துருக்கனுமா இல்லையா?.. அரசியல் அமைப்புல தன்ன இனைச்சுகுற இளைஞர்கள் சொல்றதெல்லாம், "எனக்கு நாட்டுக்காக ஏதாது செய்யணும், பத்தோட பதினொன்னா நா சாவ விரும்பல" அப்படினு சொல்லும்போது, அப்படியே என் கைலயும் அந்த நாக்கு பூச்சி மொலைக்கும்.. அத்தனை ஆவேசம், முனைப்பு, ஆவல் லாம் பாத்து, "பரவாலியே, நம்ம கூட்டத்துலயும்  ஒரு அறிவாளி இருக்கானே"னு தோணும். இருங்க இருங்க.. இதெல்லாம் நீங்க ஒரு வாரம் கழிச்சு அவங்கள பாக்குரவரைக்கும் தான். ஏன்னா, இந்த ஒரு வாரத்துல அவங்க கலர் சட்டை வெள்ளை சட்டையா மாறி இருக்கும்.. அவங்க பேச்சு, "நம்ம மாவட்டம் என்ன சொல்றாப்ள? தொகுதி எங்க போகுது?" இப்படி உடையும் பேச்சு நடையும் மாறி இருக்கும்... எனக்கு என்னமோ, மனசு அழுக்கு ஆகுறதால தான் சட்டை வெள்ளையாகுதுன்னு தோணுது.. "டேய், நீயும் பண்ண மாட்ட பண்றவனுங்களையும் கொறை சொல்லுவ" அப்படின்னு நீங்க என்ன திட்டினா, ஆமா ஐயா, நான் ஒரு கையாலாகாதவன் தான்.. எனக்கு இப்படி பொலம்புறது தான் தெரியும்.. பொலம்ப மட்டும் தான் தெரியும்... மன்னிச்சுக்குங்க..

"ஏண்டா, அணில் கூட பாலம் கட்ட அதால முடிஞ்ச கல்லு எடுத்து குடுத்துச்சாம்..நீ எல்லாம் நல்லா [அழகான] எருமை மாடு மேரி வளந்துருக்க.. என்னத்துக்கு பிரயோசனம்?"  ... கேளுங்கண்ணே கேளுங்க. யார் எவ்ளோ கேட்டாலும் கர்மம் ஒரைக்கவே மாட்டிக்குது..

சரி! நம்மள இவ்ளோ கழுவி ஊத்துரங்கலே.. நம்மளும் அரசியல் கட்சிகள், அதோட பின்னணி, ஆட்சி விதம் இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு, சினிமா செய்தி, ராசி பலன், மட்டுமே படிச்சிட்டு இருந்த நான், மத்த நியூசும் படிக்கலானேன்... வேற வேற எழுத்து அச்சு, வேற வேற சைஸ்ல, வேற வேற தலைப்புல நாளிதழ் நெறைய இருக்கு... ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்னு சொல்றான்.. முடியட்டும் விடியட்டும் கட்சி காரன் பேப்பர்ல ஊழலே நடக்கல அவங்க ஆட்சில, அந்த அம்மையார் அத பண்ணுச்சு இத பண்ணுச்சுனு எழுதுறான்.. அம்மாக்காரி, செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?னு நமீதா வ கட்சில சேத்திட்டு ஊரெல்லாம் சுத்துது.. உண்மைய எத வெச்சு தெருஞ்சுகுறது... என்னால detail அ பிரச்சனைய அலச முடில.. ஏனா, எனக்கு பிரச்னையோட ஆதி அந்தம் எதும் தெரியாது... கொட்டை எழுத்துல பேப்பர்ல வர்றத வெச்சுட்டு அன்னிக்கு ஆபீஸ் லஞ்ச் டைம்ல அலசி ஆராயுவோமனு ஒக்காந்தா, அங்க இங்கிலீஷ் பேப்பர் படிக்குறவனும், மொபைல் app ல நியூஸ் படிக்குறவனும் மாத்து கருத்து ஒன்ன முன் வைப்பானுங்க..இதுக்கு இடையில சாதி காரன் எவனாச்சும் தெரிஞ்சவன் ஒருத்தன அரசியல் வெச்சுகிட்டு இன்னொருத்தன் அவன் பங்குக்கு நல்லா குழம்பி இருக்க மூளைய குச்சி விட்டு கிளருவான் .

"சாப்டு எந்திரிச்சா போதும்டா சாமி"னு ஆய்டும்.. சரி, நம்மளே ஒரு முடிவு பண்ணுவோம்னு டிவி ய போட்டா, கூட்டம் கூட்டமா ஒக்காந்து அவனவன் அவன் கட்சி accomplishments பத்தி பேசுறத விட்டுட்டு, அடுத்த கட்சிய கொறை சொல்றதே வேலையா இருப்பானுங்க..இந்த தேர்தல் சீசன்ல பிரச்சாரம் பண்ண கிளம்புற செந்தில், விந்தியா, தியாகு மாரி.. நலிவடைந்த சில anchors கோட்ட போட்டுட்டு வந்து, ரவுடிபலம் இல்லாத கட்சிய கேள்வி மேல கேள்வி கேட்டு பேசவே வுட மாட்டனுங்க... இதுக்கு, "சொல்வதெல்லாம் உண்மையே செம த்ரில்லா இருக்கும்" .. ஊட்ல, பொண்டாட்டி சத்தமா பேசறதே புடிக்காத அவ கிட்ட நம்ம வெட்டி வீரத்த காட்ற நாம, கம்முனு ஒக்காந்து, பல்ல கடிச்சிட்டு அத பார்போம்... அங்க, இப்போ தான் நம்மக்கு சான்ஸ் னு, அந்த சேனல் நெறியாளன் வந்த பிரமுகர்கள எல்லாம் போட்டு தாளிப்பான்.. "ஆஹா.. கிடைத்தானடா எனது விடிவெள்ளினு, காலம் தவறாம அவனோட எல்லா நேர்காணலையும் ஒரு வாரம் தான் பாத்துருப்போம்.. ["5 ரூவா தானடா கேட்டேன்னு" என் mind ல Flash ஆய்டு போகுது.. இதே தேர்தலால தான அந்த மனுசனும் இப்போ ஓரமா கிடக்குராப்ள] ஆனா அடுத்த வாரமே, "இவ்ளோ பேசுறியே கமாண்டே, நீ ஏன் அந்த அம்மாட்ட இத கேக்கலன்னு ஒரு குண்டு தூக்கி போட்டானுங்க." போச்சுடா,



இப்படி எதுல இருந்தும் நமக்கு ஒரு விடிவே இல்லாம, தெளிவு கிடைகலயே நம்ம என்ன தான் பண்ணிட்டு இருந்தோம்னு நெனைக்கும்போது தான், நம்மள நாமே "அரசியல் ஒரு சாக்கடை மச்சி"னு வெட்டி பேச்சு பேசி திரிஞ்சது ஞாபகத்துக்கு வருது.. இத எப்படி சரி கட்டுறது? எப்படி தெரிஞ்சிகுறது? பேப்பர் ஐயும் டிவியையும் விட்டா வேற எப்படியும் தெரிஞ்சுக்க வழி இல்ல.. அப்போ தான் இந்த RJ பாலாஜி யும் நாலு பசங்களும் வீடியோ whatsapp ல வந்தது.. பெரும்பான்மையான இளைஞர்கள தான் அது பிரதிபளிச்சது.. நம்ம தொகுதி என்ன? யார் நம்ம வேட்பாளர்? அவரோட பின்புலம் என்ன? என்ன செஞ்சுருக்கார்? இப்படிலாம் தெரிஞ்சிக்கலாம்னு ..  "இத தெரிஞ்சிகிட்டா?.. தெரிஞ்சிகிட்டா என்ன?" முந்திரிகொட்டை மாறி மூளை வேலை செய்ய.. அப்படியே அத அமுக்கி வெச்சுட்டு, [ஆயில் புல்லிங் விளம்பரம் மாறி, பண்ணித்தான் பாருங்களேன்].. "இத மொதல தெரிஞ்சிக்கோ.. நீ மத்தத அப்புறம் அவுக்க்... சாரி! அப்புறம் கிழிக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்..

இன்னும் ரெண்டு நாள்ல தேர்தல். எப்படியும் இந்நேரத்துக்கு யாருக்கு vote போடுறதுன்னு முடிவு பண்ணிருப்போம்.. ஆராய்ந்தமா இல்லையா அதெல்லாம் விடுங்க.. இந்த தேர்தல்ல vote ஆச்சும் போடுவோம்.. அடுத்த தேர்தலுக்குள்ள மேல பொலம்பின அளவுக்கு பொலம்பாம இருக்க வழிவகை ஏதாது பண்ணுவோம்...

"நா vote போட்டேன்..  இனிமே எல்லாம் என் வீட்டு பாத்ரூம் கும் பெட் ரூம்க்கும் வரணும் னு எகத்தாளம் பேசாம.. நம்மாள முடிஞ்ச அளவுக்கு எதாவது பண்ணலாமே... உதாரணத்துக்கு.

1. வீட்ல குப்பைய தரம் பிரிச்சு குப்பை வண்டில கொட்டுறது 
2. Tissue பேப்பர avoid பண்றது
3. மின் சேமிப்பு 
4. அந்நிய பானங்கள தவிர்ர்க்குறது
5. சிக்னல ஒழுங்கா follow பண்றது 
6. முடிஞ்சா ஒரு மரம் வளர்க்குறது 
7. உணவு, தண்ணி ய வீணடிக்காம இருக்குறது 
8. மஞ்ச பையோ ஒயர் பையோ உபயோகிக்கிறது 
9. குடிச்சிட்டு வண்டி ஓட்டாம இருக்குறது 
10. மேல இருக்க எதாவது ஒன்னயாச்சும் பின்பற்றறது. 

"பெரிய இவனாட்டம் பத்து பாயிண்ட் போட்ருக்க.. இதெல்லாம் ஊர்ல இருக்குறது தான?".. ஆமாங்க.. இதெல்லாம் ஊர்ல இருக்கு.. வெறும் பேச்சு அளவுல.. நம்மள பாத்து தான் அடுத்த தலைமுறை வளரும்னு சொல்லி, "வாய்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி இறுதியாக ஒன்றை சொல்லி விடைபெறுகிறேன்..

" பிறந்து சிறந்த மொழிகளில், சிறந்தே பிறந்த மொழி, எம் தமிழ் மொழி!" 

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...