'ஆனந்த் , ஆனந்த்... உன்ன தான் கேக்குறேன் .. யாரு இந்த பொண்ணு ? இவளுக்கு என் இப்படி ப்ளீட் ஆகுது?.. இவள முன்னாலயே உனக்கு தெரியுமா?...' என்று கேள்விகளை ஸ்வேதா அடுக்கி கொண்டே போக..பதில் ஏதும் கூறாமல் ஆனந்த் ம்ரிது மஞ்சரியை கு first aid செய்து கொண்டிருந்தான்..
"ஏன் சார், இத்தன பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்களே யாராச்சும் இவங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடாதா?"
" தம்பி உனக்கு வேண்டின பொண்ணுனா, நீ கூட்டிட்டு போப்பா .. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு..இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா?.." என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து 40 வயது மதிக்க தக்க அம்மா கூற, அதை இடை மறித்து ஸ்வேதா "அப்புறம் ஏங்க ? நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?..உங்களுக்கு அத்தனை வேலை இருந்த அத பார்க்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மனசாட்சியே இல்லாம வாழறதுக்கு நீங்கெல்லாம் காரணம் தேடி வெச்சுட்டு இருங்க.. ஆனந்த் வா நம்ம அவல ஹோச்பிடல் கூட்டிட்டு போலாம்"
Nimhans Hospital, 12 30 am:
"Doctor. Hos is she now?"
"Nothing to worry Msiter. She is perfectly alright! அப்புறம் நன் குடுத்துருக்க medicines லாம் கரெக்டா டைம் கு குடுத்துருங்க..2 வாரம் கழிச்சு review வெச்சுக்கலாம்.. And one more thing, ask her not to travel for next two weeks. நான் ஒரு medicine குடுத்துருக்கேன் .. ஏதாவது காயம் பட்டா blood ப்ளீடிங் நிக்காது" என்று சொல்லிகொண்டே அடுத்த patient ஐ பார்க்க டாக்டர் செல்ல, அருகே இருந்த நர்ஸ்.. இப்போலாம் பொண்ணுங்க அவங்க parents கூட ஹோச்பிடல் வர்றது இல்ல.. boy friends மட்டும் தன வராங்க என்று முனகியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
"Take good care of your heath mridhu, will leave"
"ஆனந்த், ஒரு நிமிஷம்.. Thanks a lot!" நான் மடிவாலா தான் போறேன் ..I ll leave on my own."
Nimanhs Hospital..Bangalore ல City centre ல இருக்க neuro speciality hospital. சிட்டி கு நடுவுல அவ்ளோ பெரிய hospital யாரும் யோசிச்சு கூட பார்க்க முடியாது. சுத்திலும் பெரிய பெரிய மரம், வெவ்வேறு விதமான மனிதர்கள் வித்தியாசமான நோய்கள் னு .. அந்த இடம் தனி உலகமா இருந்தது.. ஆனந்த் கு என்னமோ அந்த இடம் ஏற்கெனவே வந்து போன இடம் மாறியே இருந்தது.ஒரு வேலை இது தனது பிரம்மை யா இருக்கும்னு தன நினைப்பை மாற்றி கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டான்.
"Do you want to continue the transaction?" "No" என type செய்து விட்டு ATM card ஐ எடுத்துட்டு வெளில வந்தவன் ஸ்வேதாவை நோக்கி.."என்னனு தெர்ல ஸ்வேதா.. இங்க ஏற்கெனவே வந்த மாறியே இருக்கு"
"என்னடா சொல்ற? நீ பெங்களூர் கே மூணு நாலாவது தடவையா தான வர்ர? அப்படி இருக்க இங்க எப்படி வந்திருப்ப?"
"தெர்ல ஸ்வேதா, எனக்கு அப்படி தான் தோணுது. நீ வேனும்ன பாரு இந்த ATM தாண்டினவுடனே ரைட் ல ஒரு கான்டீன் இருக்கும்.. அப்படி மட்டும் இருந்த கண்டிப்பா நன் இங்க வந்துருக்கேன்.."
"அடிங்க..யார்ட உன் டகால்டி வேலை காற்றை..ஆமா அந்த கான்டீன தாண்டின உடனே Research Lab வரும்.."
"Exactly ! உனக்கு எப்படி தெரியும்?"
"ஹ்ம்ம்.. SIGN BOARD பார்த்தா, யாருக்கு வேணும்னாலும் தெரியும்.." என்று சிரித்து ஊகொண்டேகொண்டே அவனை இவள் அடிக்க..இருவரும் சிரித்து கொண்டே அங்கிறுந்து வெளியே வந்தனர்.
"உனக்கு எத்தனை மணிக்கு marriage function ? - ஸ்வேதா
"evening 6 கு அப்புறம் தான்..gift வேற இன்னும் வாங்கல ..இந்த குழப்பம் வேற என்னனமோ பணுது... நான் போய் கொஞ்ச நேரம் ரரெஸ்ட் எடுக்கட்டுமா?"
"ஏய்..நான் இங்க வந்ததே உனக்கா தான்..நீ போய் தூங்கின நான் என்ன பண்ண? பக்கத்துல தான forum mall இருக்கு? அங்க போய் gift வாங்கிட்டு லஞ்ச் முடிச்சுட்டு போலாம்.. நான் அங்கிருந்து என் friend ஓட PG கு போய்டுறேன்.. நீ ரூம் போய்டு. என்ன டீல் ஓகே வா?
"ஏஷ்டு ஆகிதே?"
"மீடேரல்லி நோடு குரு! 80 Rs"
"இங்க மாறி நம்ம சென்னைலயும் மீட்டர் சிஸ்டம் போட்ட ரொம்ப வசதியா இருக்கும் இல்ல..நாய்ங்க .. நல்லா கொள்ளை அடிக்குறாணுங்க.." என்று கூறி கொண்டே தன பர்சிலிருந்து 100 ருபாய் தாளை நீட்டினான்..
"ஸ்வேதா, நீ போய் Gift செலக்ட் பண்ணிட்டு இரு.. நான பின்னால இருக்க செகண்ட் ஹண்ட் புக் கடைல கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு வரேன்.."
"சரி சீக்கிரம்! 15 mins மேல எடுத்த நான் அங்க வந்துடுவேன்.." என தன டாப்ஸ் ஐ சரி செய்தவாரு உள்ளே சென்றாள்.
ஸ்வேதா வின் மூடாத வாயும் ஓரிடத்தில் நிற்காத கால்களையும் ரசித்து கொண்டே பின்னிருக்கும் புத்தக கடைக்கு சென்றான். சிகப்பு வண்ண அட்டையில் இரண்டு நாடுகளில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் கை குலுக்கி கொன்ன்டிருப்பது போன்று அச்சிடப்பட்டு "TWO STATES" என தலைப்பிடபட்டிருந்தது. அந்த புத்தகத்தை ஸ்வேதாவின் பிறந்த தினத்தன்று அவளுக்கு பரிசளிக்கவே வாங்கி கொண்டிருந்தான்.
ஸ்வேதா வை பற்றி ..
குறும்புகளின் குடிலாய், அபிநயங்களின் அரண்மனையாய் ஆணின் கற்பனிக்கு சற்றும் குறை மிகை இல்லா வசீகரத்தை தன்னுள் கொண்டவள். கோயம்புத்தூர் சொந்த ஊர் என்பதாலோ என்னவோ அவள் வாய் மட்டும் மூடவே மூடாது. "ஐயோ அவளா? சரியான வாயாடி ஆச்சே! என்று அவள் பெயரை கேட்ட மாத்திரத்தில் மக்கள் கூறும் அழகு ராட்சசி. ச்வேதவை ஆனந்த் ஒரு ரயில் பயணத்தில் தான் சந்தித்தான்.இத்தனை நாள் புரியாத "அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால்" காப்பியத்தை ஒரு நொடியில் புரிய வைத்தவள். இன்றோடு அவன் அவளை சந்தித்து ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகி விட்டன.. அனால் அவளுக்கு மட்டும் ஏனோ வயது குறைந்து கொண்டே போனது..
புத்தகத்தை வங்கி தன் பையில் மறைத்து வைத்து கொண்டு ஸ்வேதா வை நோக்கி சென்றான். "எல்வ்ளோ நேரம்? நீ வரலானா நானே அங்க வந்துருப்பேன்..நான் செலக்ட் பண்ணின கிபிட் நல்ல இருக்கா?" பதிலேதும் பேசாமல் அவளை பார்த்து சிரித்து கொண்டே அதற்குரிய பணத்தை கட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
"ஆஹ்ன்..சொல்லுங்கப்பா..நான் நேத்து evening சே வந்துட்டேன்.. ஆமா ஆமா.. நான் போன் பண்ணினேன்.. அவன் தான் என் ரூம் கு வந்துருக்கான்.. சாயந்திரம் 6 மணிக்கு மேல தான்பா function.ஆமா நாளைக்கும் நாளாம் நாளைக்கும் இங்க தன இருக்கபோறேன்.."
"ஆமா சனி ஞாயிறு இல்ல.. சண்டே evening தான் கிளம்புறேன்.. சசி அண்ணன் வீட்டுக்கா? டைம் இருந்த போறேன். ஆஹ்ம் .. சாப்டுட்டு தான் இருக்கேன்..சரிங்கப்பா கிளம்பும் பொது கூப்டுரேன்" என தன தந்தையின் அழைப்பிற்கு பதில் அளித்து விட்டு தன நண்பன் நகுவிற்கு போன் செய்தான்..
"டேய் எங்க டா இருக்க? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா! நைட் நீ இங்க வர்றியா?
"இன்னிக்கி நைட் நான் நித்ய கூட படத்துக்கு போறேன்.. ஒன்னு பண்றேன்.. போயிட்டு நான் அங்கிருந்து நேர வந்துர்றேன்.. இல்ல இல்ல நன் சாப்ட்டு தான் வருவேன்.. நீ சாப்ட்டு படு" என் கூறிவிட்டு நகு தன் வேலையை தொடர்ந்தான்..
போன் ஐ வைத்து விட்டு திரும்பிய பொது தான் ஆனந்த் அந்த உறைய வைக்கும் காட்சியை பார்த்தான்.. ஸ்வேதா உம ஂம்ரிது மஞ்சரியும் சற்று தொலைவில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்..
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக