வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

Gift me on my Birthday

 28th Aug'20

Dear Shank..

I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Responsibilities at office makes me run behind it shank. It deeply hurt when I realized that I started thinking about you only when I made iconnect entries. I was so ashamed of myself. 

I am not sure if that is nature of Humans or is it me who forgot about u. I still remember how I cried on 16th Aug'20. But what happened to those affections and concerns I had at that time. Am sorry dude. I will admit it to you when you open your eyes and speak. I wish to stay near you and talk about all the good days, Times and moments we spent. You were just not Work Bestie, but for the Lifetime. How cud I do this? How could I be normally leading a life thinking about you only for 15 mins a day. This sucks Shank.. I hate myself now. 

Just had lunch and we were as usual talking for few mins at our floor. In just two days, is my Birthday. Madhu was wishing me in advance as he will be on holiday tomorrow being Saturday. It kidnapped my Pre-cortal index to good old days. It was you who keeps wishing me first on my Wedding Day. I expect your call on every Birthday. In-fact, last birthday when u texted me, I felt very bad. This birthday is near by and the best thing you can gift me is to open your mouth and speak some words. 

Am waiting for your Gift! Love u loads shank. 


வியாழன், ஆகஸ்ட் 20, 2020

Dear Shank

 Dear Shank

I have a lot to share with you man. This day, until few years was definitely a good day I spent. These few years I actually wanted to avoid this day but somehow few of u guys made it special. Every year, its you who wishes me in our office group even after I left the company. 

That wishes and warmth starts the day good. There are lot of things changed now shankar.. Many a things.. Neither ur message was there in the first morning nor your the warmth. I did not know you had a part of making my important days beautiful. Love u. Come off Soon! 

Loads of Love

Anand M

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2020

Come soon Dude!

Saturday 12 45 AM: 

The whole nation was engulfed in the spirit of Indianness and joy of celebrating Independence day. All my contacts were floating with Tricolor Flag all over the status in whatsapp. Even i was editing a video of skit made at office for the ID celebration. On the same day one of my colleague Sathish shared a pic of us with Tricolor code dress which was took few years back. I was rejoicing with those memories and the day went on good until I received the call. 

Madhu called me asking for Sankareswaran's family contacts as an emergency. That was the moment i had a shock without electricity. Did not know wat to do? No idea, what we wud have done without FB? Reached out to his friends and managed to pull in some contacts who were of help. I cant even pen what were the thoughts that was running my mind. All negativity forcing me to get suppressed thoughts and constantly was fighting for a positive spirit. I cud not resist the memories of shank, which kept running in my mind as a movie.. All those Movie Times, Booze moments, mock moments and be it weekend Trips, every bit of it in me had Shank with me. 

we started working together almost at the same time in Intertek. The early evening Coffee's and late evening drinks, what not? Be it the smell of Coffee or Beer, it had his fragrance and smell along. If you had been lucky enough to have a BFF at work, you know what a difference it can make. For a variety of reasons. it can make all the usual politics, challenges, and day to day ups and downs easier to Navigate and thrive in. As the calendar kept changing, the friendship deepened as we get the chance to do what we are best at with someone you enjoy spending time with. Those tiny trips, mini Lunch all made our days colorful.

Memories are the worst enemies at times. As I dwell more on memories the more I was getting emotional and painful. Apart from calling friends and knowing the status, could not do anything. As the goes by, the pain grows by. Fell asleep around 04 30 am and in the morning JP Called to give good news on his health. It was soothing at the moment but still the pain hasnt evaded. Kept roaming until Rajath called me. I broke to Sathis and JP which made me detox all negative thoughts in mind. Sitting in a Car, lying on the steering and Crying out loud is the better way of shelling out. I never knew car had shoulders. 

Now that, I am waiting for him to comeback and bug me with all daily trackers and reports. Everytime when I compose an email, my fingers wanders defualt to type your name da. Get well soon Shank! You were a similie to me.. I wanna have u as a kiddo brother and brother in law at the same time. Miss u dude! 

I felt the warmth of the hug you gave me when I was back to office from Hospital and said I missed you. I miss u too just that I wanna hug you. Love u loads. 

ஞாயிறு, ஜூன் 07, 2020

KING SIZE [18+]


"உங்களுக்கு என்ன? நல்லா சோக்கா வர்றிங்க.. வாரவியலும் நல்லா டிப்டாப்பா இருக்காய்ங்க.. " ஆனா என் நிலைமைய  பாத்தியலா.. வெத்தல பாக்கு போட்ட வாயில என்ன வெச்ச்சு, பத்த வைக்கிறாங்க.. நானே நாறுவேன்.. இதுல அவிய நாத்தமும் சேந்து.. கொமட்டறாப்ல வருது ராஜா..."

இப்படி பொலம்பிட்டே இருந்தான் காஜா. அவன் சொல்றதும் கரெக்ட் தான்,, "These guys never got a chance to get exposed" to any better circle. காஜா கூட அடிக்கடி சொல்லுவான்.. "நீ நல்ல, இங்கிலிஷ் பேசுறபா ". ஆமா, அது வாஸ்தவம் தான்.. நான் நெறைய வார்த்தை கத்துக்கிட்டேன்.. ஆபீஸ் ல use பண்ற வார்த்தைலாம் எனக்கு அத்துப்படி.. இந்த சேல்ஸ் personலா சொல்ற, "Target, Month end Pressure, Depression, Stress" அப்டி இப்டி னு நெறைய சொல்லுவேன். ஆனா எதுக்கும் எனக்கு அர்த்தம் தெரியாதுனு, காஜாக்கு தெரியாதே.. 
But, ஒன்னு நல்லா தெரிரியும்.. இத சொல்றப்போலாம், என்ன பின்னால நல்லா இழுப்பாங்க.. எனக்கு மூச்சு முட்டி, வேகா வேகமா எரியுவேன்.. உடம்பெல்லாம் எரியும். அத பத்திலாம் They never care. அதுசரி, அவனை பத்தியே அவன் கவலை படல.. இதுல என் உடம்பு பத்தி அவனுக்கு என்ன.. யாரோ, "முகேஷ் னு ஒருத்தன் படத்துலலாம் வரான்.. அவன் நமக்காக பேசுறான்.. இனிமே நம்மள யாரும் எரிக்க மாட்டாங்கன்னு" லாம் இந்த காஜா சொல்லிட்டு இருந்தான்.. ஆனா வந்தவங்க எல்லாம் அந்த முகேஷ கிண்டல் தான் அடிச்ச்சாங்க. அவன் இந்நேரம் அவமானம் தாங்காம செத்துருப்பான்.. 

இந்த காஜா தான், பொழுதுக்கும் பொலம்புவான்.. எதோ என் பேர "King Size"னு வெச்சிட்டதால, என் வாழ்க்கையே... ராஜா மாரி இருக்குதுனு.. என்ன வாங்கி குடிக்கிறவங்க நிலைமை தான் எனக்கும்.. வெளியே பளபளன்னு வெள்ளையும் சொள்ளையுமா இருந்துட்டு,, உள்ள வெறும் குப்பையை வெச்சு, வெந்தே சாகனும்.. அது மட்டுமா? பண்றது எல்லாம் பண்ணிட்டு, கடைசில கீழ போட்டு மிதிப்பாங்க.. மனுஷன் வாழ்க்கையும் அப்டி தன போல பாவம். 
 
                                                     ஆனா, இருக்குற இடத்தை பொறுத்து கூட எங்க வாழக்கையும் சமயத்துல நல்லா இருந்துருக்கு.. போன மாசம், என் friend, Iceburster தான் சொன்னான், "நா காலேஜ் இருக்க ஏரியா தான் மாப்ள டெலிவெரி ஆக போரேன்.. அங்கெல்லாம் நம்ம பசங்க சும்மா சீன் போடுவானுங்க.. பொண்ணுங்க பாக்குதுனே, நம்மள ஸ்டைலா ஊதுவானுங்க.. போகைல ஆர்டீன் உடுவானுங்க. அதெல்லாம் வேற பீல்றா மாப்ள.." இந்த மாப்ள, சீன், ஸ்டைல் இதெல்லாம் அவன் இருக்க ஏரியா  டூட்ஸ்  சொல்லுவாங்களாம். எனக்கும், "நம்ம கூட, போயிருக்கலாமே" னு பீலிக் ஆஹ் இருக்கும். ஆனா, அன்னைக்கு ஒன்னு சொன்னான் பாருங்க.. அங்க தான், எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு.. பொண்ணுங்க கூட Iceburster  கேக்குதாம். அதுல போன முறை, ஒரு IT பொண்ணு போட்டுட்டு வந்த லிப்ஸ்டிக் ல இவனுக்கு ரெட் shoe  போட்ட மாரி ஆய்டுச்சாம்.. நல்ல mouth spray ல இருக்குறதால, பரவால்ல.. பொண்ணுங்க தம் அடிக்கட்டும்னு விட்டுட்டானாம்..  
                                                  என்னமோ, இதெல்லாம் என்னால பாக்க முடியாது.. எங்க தாத்தா காலத்துல... கிழவிங்க தான் எங்கள, நெறைய வாங்குங்களாம்.. தொங்கட்டான ஆட்டிகிட்டே வாங்கிட்டு போவாங்கலாம்.. அப்போலாம், எங்க தாத்தாபாட்டியா, சுருட்டு னு தான் கூப்டுவாங்கலாம்.. எங்க தாத்தா பேரு கூட, ரதம். நல்லா கறுப்பா, கட்டையா இருப்பாரு.. அவர்கிட்டயே யாரும் போக முடியாது.. இப்போ என்னடானா, சிள்வண்டுலாம் என்ன வாங்கிட்டு போய் மறைஞ்சு கூட குடிக்குறது இல்ல.. open uh அடிக்குதுங்க.. கூட என்ன மாறியே மாரிஜூஆனா ஹாஷிஸ் னு எங்களோட உயர் ஜாதிய வேற சேத்து பத்த வைக்குறாங்க.. எங்க ரெண்டு ஜாதிக்கும் ஒத்துக்காது.. ஓவர் புகைச்சலா இருக்கும். இந்த பசங்க அதுல போதை ஆய்ப்பானுங்க..
                       இன்னும் என்ன எல்லாம் பாக்கணும்.. எனக்கு ரொம்ப நாளாவே மனசுல இது ஓடிட்டு இருக்கு.. என் நம்ம வாழக்கை இப்டியே இருக்கு.. எங்களை மாரியே ஒரு கூட்டம்., இல்ல இல்ல... அவங்கலாம் புண்ணியம் பண்ணினவங்க போல .. அவங்களும் நெருப்புல தான் எரியுறாங்க.. எங்கள மாரி.. புகை தான் விடறாங்க.. ஆனா, நல்ல வாசனையா இருக்கு.. எப்போதும் சாமி பக்கத்துல வெச்சிடுறாங்க.. கை  எடுத்து கும்புடுறாங்க.. 
                                 எங்களை பத்த வைக்கும் பொது, குனிஞ்சு கை  கூப்புறத்துக்கும் அவங்கள பத்த வைக்குறப்போ கை கூப்புறத்துக்கும்  எவ்ளோ வித்தியாசம். என் இந்த மனுசங்க ஒரே மாரி ரெண்டு விஷயத்தை வேறு மாரி பாக்குறாங்க?

 எனக்குள்ள இருக்கு அழுக்கு, அந்த ஊதுபத்தில இல்லையே அதுனாலயா? புரியல.. தேடிட்டு இருக்கேன்.. வெளிய வெள்ளையா  இருந்தாலும்.. நா உள்ள அழுக்கா இருக்கேன்.. ஆனா ஊதுபத்தி, வெளில கருப்பா இருந்தாலும் உள்ள ஒன்னும் இல்லாம.. இறை பணிக்கே தன்னை அர்பணிச்சிக்கிட்டான். அதுனாலயா.. 

ஒன்னு உறுதியா சொல்ரேன்..சும்மா கொஞ்ச நேரம் உங்க வாயில இருந்து உங்க ரத்தத்துல கலக்குற எனக்கே, இவ்ளோ யோசனை வருதுன்னா?.. உங்க எண்ணமும் அதை ஒத்த உணர்வும் சரியா இருந்தா.. நீங்க கூட ஊதுபத்தியா.. இல்ல இல்ல.. ஆன்மீகவாத்ய கூட மாறலாம். 

"அண்ணா, ஒரு கிங்ஸ் ஒரு டீ" சொல்டாரு துறை. இதோ என் தலய பிடிச்சு அந்த பிஸ்கட் டப்பா மேல வெச்சிட்டான் நாயர்.. அந்த அரவிந்த், ID Card la, அப்டிதான் போட்ருக்கு.. இதோ, என் மேல தீய வெச்சிட்டான்.. நா எரிஞ்சிட்டே இருக்கேன்,, இன்னும் ஒன்னு ரெண்டு second தான் வாழ்க்கை..  உங்களுக்கு அப்டி இல்ல.. யோசிங்க.. 

- கோல்ட் பில்டர் கிங்ஸ் 

வெள்ளி, மே 15, 2020

Preethi


ப்ரீத்தி 

வீடு ஒரே பரபரப்பா இருந்தது.. இதுக்கு முன்னால இந்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப்போ, இப்படி தான் ஆளாளுக்கு சுத்திட்டு இருந்தாங்க. என் தலை எழுத்து படி வழக்கம் போல அடுப்பங்கரையிலும் பாத்திரம் தேய்க்கிற இடத்தலையுமே விதிசிச்சிருக்கு எனக்கு 

அன்னைக்கே ஒரே தடபுடல் சமையல் தான்.. அடுப்படில வடிச்சு கொற்ற நமக்கு தெரியாதா... எத்தனை முறை சமைச்சு சமைச்சு குடுத்தாலும்.. ஒரு வார்த்தை," சாப்டியா, நீ?" னு கேக்க நாதி இருக்கா இந்த வூட்ல.. எல்லா என் விதி.. என்ன இங்க காசுக்கு ஆசைப்பட்டு வித்துபூட்டான் அந்த குமாரசாமி முதலியார்..
                    பேருக்கு தான் அந்தஆளு பெரிய மனுஷன்.. மத்தபடி கடைக்கு வார பொம்பளையால் கிட்ட பல்ல கெஞ்சுர  சராசரி ஆளுதான்.. எதோ ஒரு நல்ல நாள்ல தான் என்னையும் இங்க அனுப்பி வெச்ச்சான்.

பரபரப்பு முடிஞ்சு, வீட்டுக்குள்ள வந்தாச்சு. புதுசு, பேரு ப்ரீத்தி யாம்.. நல்ல பவுச தான் இருந்தா!.. வரும் போதே மிக்ஸி, தட்டு முட்டு சாமான்னு தான் வந்துருக்கா .. இனி, நம்மள யாரு கவனிக்க போறா? வந்தவ, அப்டியே மடிப்பு கலையாம இல்ல இருக்கா?, அடுப்பங்கரைக்கு வந்தா, நெருப்புல வெந்து தான ஆவோனும்.. இவ மட்டும் என்னவோ அப்டியே தள்ளியே நிக்குற.. யாரது சொல்லனுமா என்ன? 
                                       நாலாம் வந்தன்னைக்கே, இந்த ஓட்டு பெரிய மனுசி, மொத மொத சமைக்கிறோம்ன்னு கேசரி செஞ்சா. நல்ல பக்குவமா வேகவச்ச்சு, தொண்டை குளிக்குள வழுக்கிட்டு போற மாறி இல்ல செஞ்சேன். அன்னைலேந்து, இப்போ வரைக்கும் நா தான் இந்த வீட்டுல எல்லாம். ஏன், இவங்க புள்ள, புல்லை பெத்துட்டு வந்தப்போ , "பச்ச உடம்புக்காரி, பால் சுரக்கனும், சத்தா இருக்கணும்னு, கருவாடும் கறியும் ஆக்கி கொடுத்தனே.. எல்லாம் மறந்து போச்சு.. நன்றி கேட்ட மனுசங்க.. 

இந்த வீட்ல நா வந்த சமயம்லாம், ரொம்ப வறுமை... விறகுஅடுப்புல தான் சமையல்.. அந்த நெருப்பும் பொ கையும் பழக்கிட்டு, இவங்களுக்காகவே தான என் அழகையும் கூட கவனிக்கல. அதெல்லாம் ஒரு காலம். நா முதலியார் கடைல இருக்கும்போதெல்லாம், வர்றவங்க என்ன ஒரு முறை திரும்பி பார்க்காம போனதே இல்ல.. ஒருமுறை யாவது என்ன தொட்டுறக்கூடாதான்னு ஏங்கின எத்தனை பேர நா சொல்ல?.. ஆனா, அந்த அழகு எல்லாத்தையும், இந்த அடுப்படிலேயே கழிச்சு  கழிச்சு இன்னைக்கு கருப்பா, சொர சொறன்னு வனப்பு இல்லாம இருக்கேன்.. தீண்ட ஆளில்லாம கெடக்கரேன். அழக மட்டுமா தொலச்சன்.. இவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் நானும் இல்ல பட்டேன். கூட சேந்து  பாடுபடல? இதுக்கெல்லாம் செய்யுற கைமாறா இது?.. "காசு வந்தா, கஷ்டம் தெரியாது.. கூட ஒழைச்சவங்க தெரியாது"னு சொல்றது சரியா தான் இருக்கு. 

இன்னைக்கு, இந்த ப்ரீத்திய தலைல தூக்கி வெச்ச்சு ஆடுற அம்மாக்கு ஆறுதலா எத்தனை முறை இருந்துருக்கேன். புருஷன் அடிச்சதையும் மிதிச்சதையும் பசங்க கிட்ட சொல்லமுடியுமா, என்கிட்டே வந்து.. சமசிச்சுட்டேயே எத்தனை முறை அழுதுறுப்பா? ஒரு வார்த்தை, வெளிய சொல்லிருப்பனா? இவங்க அக்காவும் இவங்களும் பேசின ரகசியத்தைத்தான்  வெளிய சொல்லிருப்பேனா? இந்தம்மா அழறப்பலாம் எத்தனை முறை, அந்த கண்ணு தண்ணிய நான் பொசுக்கிருப்பன்.. எப்படி மறந்தாங்க என்ன? சத்தா சமைக்கணும்னு என்னை கூப்டபோலாம், எத்தனை  ஆசையா அந்த ஈரல் வறுவல் செஞ்சு தந்தேன்.. வசதி வரவும் என்னை ஒதுக்க ஒதுக்க,, என்னால தாங்கிக்கவே முடில... என் அத்தனை அழகையும் வனப்பையும் இந்த ஆண்டவன் எனக்கு திருப்பி தரக்கூடாதா?.. தவறவிட்ட என் வாழ்க்கையை நா திரும்ப வாழக்கூடாது? 
                       நாள் கிழமைனு, எல்லா பூஜை புனஸ்காரத்துக்கு தேவையான பிரசாதம் லாம் செஞ்சு தந்தேனே.. அதும் நா பண்ணின சுண்டல் தாளிப்புனா, இந்த வீடு பெரியவருக்கு அத்தனை இஷ்டம். நல்ல நெறைய சாப்பிடுவாரு. ஆனா என்னை ஒரு முறை கூட அவர் கூப்டதும் இல்ல பேசியதும் இல்ல.. அவருக்கு எல்லாம் இந்த அம்மா தான்.. பாத்து பாத்து சமைக்குறதுல இருந்து, சாப்புட்டு, தண்ணி குடிச்ச்சு மாத்திரை முழுங்குற வரை இந்தம்மா தான் கவனிப்பாங்க.. நா  இருக்கேனான்னு எட்டி பாத்தது கூட இல்ல.. ஏன்? பக்கத்து வீட்ல வந்து, விசேஷத்துக்கு சமைக்க கூட, என்ன அந்தம்மா கிட்ட கேட்டுட்டு அனுப்ப சொல்லுவாங்க.. போன நா, திரும்பவருவனான்னு ஒருத்தரும் கவலைப்பட்டது கூட இல்ல.. இந்த வீடு குட்டிப்பையன் கூட தான் வருவேன்.. வந்தா, அதே தான்..அதே அடுப்பங்கரை.. 


இதோ இதோ , வந்துட்டா அந்தம்மா.. நா உங்ககிட்ட பொலம்பினதா சொல்ராதிங்க.. இவங்க தான் என்ன ஒதுக்குறாங்க, இப்போ வந்தவளாச்சும் நம்ம கிட்ட பேசுவாளான்னு பாத்தா.. அப்டியே ஒட்டியும் ஒட்டாமையும் இல்ல இருக்கா.. அவளா பேசினா தான் பேசணும்னு வைராக்யத்தோட இருக்கேன். பாக்கலாம் அப்டி என்ன தான் சமைகிச்சு இவங்கள அசத்தப்போறானு.. ஹ்ஹம்ம்ம்... புதுசு புதுசா, வாயில நொலையாத அயிட்டமா சமைக்குரா.. அன்னைக்கு என்னமோ செஞ்சாலே.. ஹ்ம்ம், பட்டர் சிக்கன்.. அடேங்கப்பா... ரெண்டு நாள் அவ மேலயே அந்த வாசம் இருந்துச்ச. வந்த ஒரே வாரத்துலயே பெருசுல இருந்து சிறுசு வரைக்கும், வலச்சு போட்டுட்டா. எதோ ஆரோக்கியமா சமைக்குறாலாம்.. எண்ணெய் இல்லாமையே அசத்துறாளாம். மொறுகலா தோசை சுடுறாளாம்... சமைக்குறதே தெரிலயாம்.. இந்தம்மா, பக்கத்துக்கு வீட்டு பவளத்தகிட்ட பெருமை பீத்திட்ருந்தாங்க.. எல்லாம் ஆட்டம்... 

கொஞ்ச நாள் இருக்கும்.. எல்லாம் அவசரம் அவசரமா வீடு பெரியவரை தூக்கிகிட்டு, ஆஸ்பத்திரி போனாங்க.. அவருக்கு ரத்த கொதிப்பாம்.. எனக்கு என்ன பண்றதுனே தெரில.. புடிச்சு வெச்ச சிலை மாறி ஒக்காந்துட்டே இருக்கேன். நகர முடில..  அந்த பெரியவருக்கு ஏதும் ஆயிடக்கூடாதுனு மனசார வேண்டிகிட்டேன். 

"இல்லக்கா, இப்போ நல்லாருக்காரு..புதுசு புதுசா பன்னீர் சிக்கென்னு சாப்புட்றது.. அப்புறம் வல்லு வல்லுனு விழுந்தா.. யாருக்கு தான் பிரஷர் வராது,  இந்த மனுசனுக்கு  பாத்து பாத்து கவனிச்சு, என்ன சுகத்த கண்டோம்? கருமம்.. நம்ம பொழப்பு அப்டி.. அம்மா காலத்துல இருந்து, இப்போ வரை.. அழுதே சாவணும்னு தலையெழுத்து" என்று அவங்க அக்கா கிட்ட அழுதுட்டு இருக்க 

"செல்வி, டீ கொண்டு வா"னு சத்தம் கேட்டு, சட்டுனு போன வெச்சுட்டு அடுப்படிக்கு வந்தாங்க. டீ வெச்ச்சு குடுத்துட்டு, மறுபடி அவங்க அக்கா கிட்ட போன் பேச ஆரமிச்சாச்சு. 

"காலைல கோதுமை தோசை ஊத்தி, சட்னி அரைச்சேன்.. மதியானதுக்கு கீரை சுண்டி, ரசம் வைக்கலானு இருக்கேன்.. சத்தா சாப்பிடட்டும்! சரிக்கா நா வைக்குரேன்" னு சொல்லிட்டு, கவலையோடு எனன தேடி வந்து, அந்த கரித்துணிய  எடுத்து தொடச்ச்சுட்டு, அடுப்புல வச்சு என்னை ஊத்தி தாளிக்க..என்னனு சொல்லுவேன்?... சந்தோஷத்துல.. எள்ளும் கொள்ளுமா கடுகு தெரிச்சேன்.. 

சும்மாவா? நான், இந்த வீடு, இந்த வீட்டு ஆளுங்க.. இவங்க கிட்ட இருந்து.. என்னை பிரிக்கவே முடியாது.. என் குடும்பம் இது.. 

"ப்ரீத்தியா? தோ, வந்த பெட்டிலயே கட்டிப்போட்டு, பரண் மேல கடக்குறா... அவ கூட வந்த மிக்ஸி மட்டும் இப்போ வேலை செஞ்சுட்டு இருக்கு.. பிரீயா வந்த நாண் ச்டிக் கடாயும் நானும் ஒண்ணா? "


 -இப்படிக்கு இரும்புச்சட்டி 

ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

Love - The Power Word


Its been a while, I penned down. Not sure, if I had no content or was unwilling to write actually. From the day 1 of Covid Lockdown, I have been thinking of writing and reading, but ended up doing neither. 

All these days of covid went productive until last few days, which Fcuked my mind badly and was going through a lot in a relationship which kept bugging me and was following me 24 X 7. Hold it on there.. 

" Self control is the difference between the Need and Want" 

This sounds like a casual statement but which made me think a lot of times. I have such similar moments in life very often in me. For instance, "Objects in the mirror or closer than they appear", is a simple statement and the intend of this was entirely different. I kept confusing this message with my relationships for almost years together. I got so associated with the message for such a long time and almost 9 years for no reason, I kept clinging on to this quote. 
                                So Yeah, "Self control is the difference between the Need and Want" is a dialogue from this season 2 series of "Four More Shots Please". I was watching it yesterday night and from then the small scribbler in me woke up. 

Today, it was a pretty well planned Lazy Sunday and I have decided to cook Jamun's for Navil. After finishing the entire season, I went to shit. Here, "May be the guys" would agree with me, that most of the decision is made there, at that moment. Is it because that your shit gets out of your body and you could think clear or its the urge that u feel while shitting? doesn't matter now.
                                                          Got refreshed quickly and got into preparing Jamun. I never had the content in mind at all to write about something. Btw it is a new recipe, Jamun made from Sujee. I started rolling the dough with so much of thoughts  running over mind. Kept rolling.. rolling... yes, both the dough and my thoughts came to a perfect shape. I would want to discuss about Love. All time favourite subject isn't it? No it is not! It doesn't exist the way it sounds. 

It is a smooth, soft and a more loved word in the world. Anyone would use it anywhere on anything. "I fcuking love it", "I love fcuking it"  however u want and to anyone u want. I would call him a Masochist. Yes, Love is a masochist. There is always pain behind the pleasure in Love. And the pleasure is not that being loved, it is actually the Pain and Suffering in love that causes the pleasure.  
                                    In all my experiences [I dont wanna call it relationship], all I remember is the pain of being ignored, the pain of longing for someone, the pain of getting their messages, the pain of seeking their attention, the pain of care, the pain of needing em, cuddling em, hugging em and crying along. My mobile would have wished many times, that it wanted to be my partner next time as he got witnessed me through out the journey.  

Now that, I am in my mid 30's does this masochist word still exist? Yes, but this time, neither the pain is pleasure nor the pleasure is pleasure. But the pleasure is a pain. It comes with so much strings attached and hence expectations kept growing. The expectations of one [Pleasure] is the disappointment of the other [Pain]. 

"Well, then how does this whole thing around Love work?". You, are shooting this question to a wrong person! A person who miserably failed in Teenage Love, 20s and 30s Love. 

What does he have to expect in his 40's, 50's and so on. 
Doesn't his son's affection satisfies him? Doesn't the love by his friends comfort him? Doesn't the family's care soothe him?  
                               What is that one looks for in Love? Is it the Feeling? Is it the Desire or is it the Temptation? 
                                                                          to be cntd.....

வெள்ளி, அக்டோபர் 25, 2019

Naan Deepavali Navil!

சில வருடங்களாக தான் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன் . வறுமையாலா அல்லது வயதினாலா என்று பார்த்தால் வறுமையே பெரும்பாலும் மேலோங்கி நிற்கிறது.

சுருக்கமாக சொன்னால், அண்ணன் வேலைக்கு சேர்ந்த பின்பு தான் சிறிதேனும் இன்பம் எட்டி பார்த்தது..அது வரை தீபாவளி ஒரு பணக்கார பண்டிகையாகவே எனக்கு தோன்றிற்று. இருந்தாலும், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, எந்த டிவியில் என்ன நிகழ்ச்சி என்று குறிப்பெடுத்து கொண்டு நாள் முழுக்க டிவி யை குத்தகைக்கு எடுத்துகொண்டு நானும் என் அண்ணனும் இருக்க, அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கு உதவ, எங்களை கடைக்கு அழைக்கும் பொழுது  தான் எங்கள் தீபாவளி யும் பட்டாசும் அப்பாவிடம் ஆரம்பிக்கும்...

நிற்க, இவ்வாறாக பிளஷ்பக் நகர. . தற்போது தீபாவளி கார்ப் கம்பெனிகள் நம்மை அந்த கொடாததிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நம்மளை அழைத்து சென்று விட, அதுவே நம்மை வீட்டிலும் தொற்றி கொள்கிறது.. 

திருமணம் வரை, ஒரே டிசைன் இல் தீபாவளி செல்ல, தலை தீபாவளி அன்று ஆரமித்தது இந்த மாற்றம்.. முதல்முறை அசைவ விருந்தில் தொடங்கியதில்லை எனது தீபாவளி கொண்டாட்டம்.. சும்மா சொல்லக்கூடாது, அசைவ விருந்துகளை சமைக்க, எனது அத்தைகளை போல் இன்னும் யாரையும் நான் பார்த்ததில்லை.. தலைக்கறி  கூட எனக்கு அவையள் ஆகா தோன்றிய நாட்கள் உண்டு.. 

தலைதீபாவளி என்பதால், சிவகாசியில் இருந்து நேரடி கொள்முதலாக தடபுடல் பட்டாசுகளுடன் இறங்கி, ஊரில் உள்ள வாண்டுகளுக்கு போட்டியாக கொளுத்தினேன். வழக்கம்போல் சில வருடங்களாக அசைவ உணவும் நண்பர்களுடன் அரட்டையுமாக சென்றது தீபாவளி.... ஆனாலும் மனதில் என்னமோ ஒரு ஏக்கமும் முழு திருப்தியும் ஏற்பட்டதாய் இல்லை.. பல வருட ஏக்கம்.. 

ஆனால் இந்த தீபாவளி, என் இத்தனை வருட வாழ்வில் ஓர் பரிபூரண பண்டிகையாக மாற்றியுள்ளது.. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, "அப்பா, எனக்கு பட்டாசு வேணும், கிறீன் கலர் டிரஸ் வேணும்" என்று, கொஞ்சலுக்கு இணங்க ஆரமித்தது எனது தீவாளி, மூன்று வாரங்களுக்கு முன்பே தேடி அலைந்தாயிற்று அந்த பச்ச சட்டைக்கு.. வெஸ்ட் சைடு, ட்ரென்ட்ஸ், ஹாப்ஸ்காட்ச் என தேடி ஓய்ந்து, கிட்டத்தட்ட பச்ச சட்டை அவனுக்கும், முழு பச்ச சட்டை எனக்கும் வாங்கி வந்து தந்த பின், "அப்பா, இந்த சட்டை சூப்பரா இருக்குப்பா என் மனம் நெகிழ்ந்த அந்த தருணமும், 

அனைவரும் பண்டிகைக்கு பலகாரங்கள் செய்கையில், கடையில் வாங்கியே பழகிய எனக்கு, "என் அண்ணி செய்த லட்டு உம் பர்பி யும், ஆர்வத்தை தூண்ட, இனிதே துவங்கியது "#ரவாலட்டு படலம். யூடியூபில் சில பல விடீயோக்கள் பார்த்து மதியம் ஆரமித்தேன். 

ரவை கிளறிய பின், சிறிது நெய் ஊற்றி உருட்டினால், அரசியல் கச்சியை போல் ஒன்றும் ஒட்டவே இல்லை.. இதில் விரலை சுட்டுக்கொண்டது தான் மிச்சம், {ஓட்டு போட்டு அல்ல, சூட்டில் கையை வைத்து] சிறிது இடைவேளை விட்டு, பால் ஊற்றி திரட்டி வந்த ரவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டியபின்பு தான், வடிவத்திற்கு வந்தது எனது நம்பிக்கையும் லட்டுவும். நான் செய்வதை, அப்பப்போ வந்து, காட்டுங்க..காட்டுங்க.. என்று ஆசையாய் கேட்ட, நவிலின் செல்ல இம்சைகளுடன் ரெடி ஆகியது ரவாலட்டு. செய்த லட்டுவை சாப்பிடும் முன் போட்டோ எடுத்தே  பழக்கப்பட்ட நான், அதை என் பேமிலி குரூப்பிலும், தம்பி இனியனுக்கும் கண்ணனுக்கும் அனுப்பி அப்ப்ரூவல் பெற்று விட்டேன். ஆம் பார்த்ததும், ரவாலாட்டு என்று கண்டுபிடித்து விட்டான்.. சக்ஸஸ்! வெற்றி! வெற்றி! 

"அப்பா, நான் உங்க லாலாலட்டு, நீங்க செய்றது ரவாலட்டு!" என்று, அவன் அடித்த மொக்கைகளை [என் வாரிசு ஆயிற்றே] ரசித்தவண்ணம் உருண்டைகளை பிடித்தேன். ஆரிய பின்பு சாப்பிட்டு, "இன்னொன்னு குடுங்கப்பா, இது ரொம்ப நல்லாருக்குப்பா, இன்னொன்னு குடுங்க!" என்று கேட்டு வாங்கி சாப்பிட்ட தருணத்தில் முடிந்தது எனது ஒட்டுமொத்த தீபாவளி ஏக்கமும். 

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...