வெள்ளி, அக்டோபர் 25, 2019

Naan Deepavali Navil!

சில வருடங்களாக தான் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன் . வறுமையாலா அல்லது வயதினாலா என்று பார்த்தால் வறுமையே பெரும்பாலும் மேலோங்கி நிற்கிறது.

சுருக்கமாக சொன்னால், அண்ணன் வேலைக்கு சேர்ந்த பின்பு தான் சிறிதேனும் இன்பம் எட்டி பார்த்தது..அது வரை தீபாவளி ஒரு பணக்கார பண்டிகையாகவே எனக்கு தோன்றிற்று. இருந்தாலும், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, எந்த டிவியில் என்ன நிகழ்ச்சி என்று குறிப்பெடுத்து கொண்டு நாள் முழுக்க டிவி யை குத்தகைக்கு எடுத்துகொண்டு நானும் என் அண்ணனும் இருக்க, அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கு உதவ, எங்களை கடைக்கு அழைக்கும் பொழுது  தான் எங்கள் தீபாவளி யும் பட்டாசும் அப்பாவிடம் ஆரம்பிக்கும்...

நிற்க, இவ்வாறாக பிளஷ்பக் நகர. . தற்போது தீபாவளி கார்ப் கம்பெனிகள் நம்மை அந்த கொடாததிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நம்மளை அழைத்து சென்று விட, அதுவே நம்மை வீட்டிலும் தொற்றி கொள்கிறது.. 

திருமணம் வரை, ஒரே டிசைன் இல் தீபாவளி செல்ல, தலை தீபாவளி அன்று ஆரமித்தது இந்த மாற்றம்.. முதல்முறை அசைவ விருந்தில் தொடங்கியதில்லை எனது தீபாவளி கொண்டாட்டம்.. சும்மா சொல்லக்கூடாது, அசைவ விருந்துகளை சமைக்க, எனது அத்தைகளை போல் இன்னும் யாரையும் நான் பார்த்ததில்லை.. தலைக்கறி  கூட எனக்கு அவையள் ஆகா தோன்றிய நாட்கள் உண்டு.. 

தலைதீபாவளி என்பதால், சிவகாசியில் இருந்து நேரடி கொள்முதலாக தடபுடல் பட்டாசுகளுடன் இறங்கி, ஊரில் உள்ள வாண்டுகளுக்கு போட்டியாக கொளுத்தினேன். வழக்கம்போல் சில வருடங்களாக அசைவ உணவும் நண்பர்களுடன் அரட்டையுமாக சென்றது தீபாவளி.... ஆனாலும் மனதில் என்னமோ ஒரு ஏக்கமும் முழு திருப்தியும் ஏற்பட்டதாய் இல்லை.. பல வருட ஏக்கம்.. 

ஆனால் இந்த தீபாவளி, என் இத்தனை வருட வாழ்வில் ஓர் பரிபூரண பண்டிகையாக மாற்றியுள்ளது.. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, "அப்பா, எனக்கு பட்டாசு வேணும், கிறீன் கலர் டிரஸ் வேணும்" என்று, கொஞ்சலுக்கு இணங்க ஆரமித்தது எனது தீவாளி, மூன்று வாரங்களுக்கு முன்பே தேடி அலைந்தாயிற்று அந்த பச்ச சட்டைக்கு.. வெஸ்ட் சைடு, ட்ரென்ட்ஸ், ஹாப்ஸ்காட்ச் என தேடி ஓய்ந்து, கிட்டத்தட்ட பச்ச சட்டை அவனுக்கும், முழு பச்ச சட்டை எனக்கும் வாங்கி வந்து தந்த பின், "அப்பா, இந்த சட்டை சூப்பரா இருக்குப்பா என் மனம் நெகிழ்ந்த அந்த தருணமும், 

அனைவரும் பண்டிகைக்கு பலகாரங்கள் செய்கையில், கடையில் வாங்கியே பழகிய எனக்கு, "என் அண்ணி செய்த லட்டு உம் பர்பி யும், ஆர்வத்தை தூண்ட, இனிதே துவங்கியது "#ரவாலட்டு படலம். யூடியூபில் சில பல விடீயோக்கள் பார்த்து மதியம் ஆரமித்தேன். 

ரவை கிளறிய பின், சிறிது நெய் ஊற்றி உருட்டினால், அரசியல் கச்சியை போல் ஒன்றும் ஒட்டவே இல்லை.. இதில் விரலை சுட்டுக்கொண்டது தான் மிச்சம், {ஓட்டு போட்டு அல்ல, சூட்டில் கையை வைத்து] சிறிது இடைவேளை விட்டு, பால் ஊற்றி திரட்டி வந்த ரவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டியபின்பு தான், வடிவத்திற்கு வந்தது எனது நம்பிக்கையும் லட்டுவும். நான் செய்வதை, அப்பப்போ வந்து, காட்டுங்க..காட்டுங்க.. என்று ஆசையாய் கேட்ட, நவிலின் செல்ல இம்சைகளுடன் ரெடி ஆகியது ரவாலட்டு. செய்த லட்டுவை சாப்பிடும் முன் போட்டோ எடுத்தே  பழக்கப்பட்ட நான், அதை என் பேமிலி குரூப்பிலும், தம்பி இனியனுக்கும் கண்ணனுக்கும் அனுப்பி அப்ப்ரூவல் பெற்று விட்டேன். ஆம் பார்த்ததும், ரவாலாட்டு என்று கண்டுபிடித்து விட்டான்.. சக்ஸஸ்! வெற்றி! வெற்றி! 

"அப்பா, நான் உங்க லாலாலட்டு, நீங்க செய்றது ரவாலட்டு!" என்று, அவன் அடித்த மொக்கைகளை [என் வாரிசு ஆயிற்றே] ரசித்தவண்ணம் உருண்டைகளை பிடித்தேன். ஆரிய பின்பு சாப்பிட்டு, "இன்னொன்னு குடுங்கப்பா, இது ரொம்ப நல்லாருக்குப்பா, இன்னொன்னு குடுங்க!" என்று கேட்டு வாங்கி சாப்பிட்ட தருணத்தில் முடிந்தது எனது ஒட்டுமொத்த தீபாவளி ஏக்கமும். 

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...