வியாழன், டிசம்பர் 19, 2013

இதெல்லாம் ஒரு நாவலா? - பகுதி 3

"ஸ்வேதா, எப்போ டா வந்தா?"

"இன்னைக்கு காலைல தாண்டா! நைட் கிளம்பிடுவா.."

"நகு, எனக்கு ஒன்னும்  புரிலடா, ஸ்வேதா வர்றதும் தெரியாது.. இந்த  பொண்ணுங்களுக்கு என்ன சம்மந்தம்? ஸ்வேதா எண்ட்ட ஏன் இவள தெரியாத மாறி நடந்துக்கணும்? ஒரே குழப்பமா இருக்கு டா.."

"அத விடுடா பார்த்துக்கலாம்.. ஆமா நீ கல்யாணத்துல சாப்டியா இல்லையா? இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட!" 

"இல்ல நகு சாப்டல.. மனசு சரில அதான் உடனே வந்துட்டேன்., நீ ஏன் சீக்கிரம் வந்துட்ட.. படம் முடிய எப்படியும் பதினோறு மனியாச்சும் ஆகுமே.."

"இல்ல.. அது வந்து..சரி நான் உனக்கு சாப்ட எதாச்சும் வாங்கிட்டு வரேன்.." நீ ரெஸ்ட் எடு.. போன் உண்ட இருந்தா நீ பேசிட்டே இருப்ப.. நான் எடுத்துட்டு போறேன்.. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. " என கூறிவிட்டு நகு பைக் சாவியையும் தலைகவசத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்..

நகு உம் ஆனந்தும் கல்லுரி நண்பர்கள். நெருங்கிய நண்பர்கள தான் ஆனா அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டதும் அவங்க நட்பு ஆனதும் இவங்க ரெண்டு பேருக்கும்  புலப்படாத விசயம்.. ஆனந்த், படித்தது வேறு co-ed ஆயிற்றா. பெண்களிடம் சரளமாக பேசகூடியவன். தன் மாமா பெண்களிடம் விளையாடியே, அவனுக்கு பெண்களை கண்டால் பெரிதாக வெக்கமோ கூச்சமோ வராது.. வெக்கம் இவனை கண்டால் நாணி ஓடி விடும் அளவிற்கு அண்ணன் மகா கடலை மன்னன்.. கல்லூரியிலும் அப்படித்தான்.. அனால் நகு இவனுக்கு நேர் எதிர்.. படித்தது பாலகர் பள்ளியில்.. டிப்ளமோ பட்ட படிப்பை முடித்துவிட்டு lateral entry ஆக கல்லூரிக்கு சேர்ந்தவன்.. பெண்களிடம் அதிகம் பழகாதவநாளோ நகு விற்கு ஆனந்தையும் அவனது தோழிகளையும் சற்றும் பிடிக்காது...

இருப்பினும் விதி வலியது ஆயிற்றே.. இவர்கள் நண்பர்களாகி போனார்கள்.. நகுவிற்கு முன்பே ஆனந்த் மற்றும் அவனுடைய வகுப்பு தோழர்கள் வேலை கிடைத்து சென்று விட.. நகு மட்டும் சில நாட்கள் கழித்து பெங்களுரில் ஒரு வேலைக்கு சேர்ந்தான். 

இன்றிலிருந்து சில மாதங்களுக்கு முன்னால்..



"டே நகு, எப்டி இருக்க? நான் அடுத்த வாரம் பெங்களூர் வரேன்.. ஆபீஸ் வேலையா தான்.. 3 நாள் இருப்பேன்.. வந்துட்டு கால் பண்றேன்"..

"ஓ சூப்பர் டா! அப்போ இங்க வந்துடு.. இங்கயே தங்கிக்கலாம்"

"இல்லடா நான் ஸ்கூல் friend சிவா கிட்ட அங்க வர்றதா சொல்லிருந்தேன்... அங்க போய்டுறேன்.. வரும் போது கூப்டறேன்...என்ன?.. சரி நகு வெச்சுடுரேன். bye"

Tin Factory, Kasthuri Nagar Lay out, neram 07 00 PM.

சோடியம் லாம்ப் ஒளியில் கஸ்துரிநகர் லே அவுட் தகித்து கொண்டிருந்தது.. காதில் பெங்களூர் குளிர் ஈட்டி கொண்டு குத்தியது.. மெர்குரி லாம்ப் ஒளியில் மின்னும் கண்ணாடி சூப்பர்மார்க்கெட்கள்; மனம் பரப்பிகொண்டிருக்கும் சோளத்தின் ஆவி குளிரின் தாக்கம் தாங்காமல் அங்குமிங்கும் அல்லாடியது..ஆங்காங்கே கன்னைச்சிமிட்டும் இரண்டு சக்கர வாகனனங்கள்; அதனில் ஓட்டியே பிறந்தது போல் ஆணின் பின் பெண்கள் அமர்ந்து அவன் காதில் எதோ பேசிகொண்டே போனால்..பார்பவர்கள் நிச்சயம் அவள் முத்தமிட்டுருக்க வேண்டுமென்று தான் நினைப்பார்கள்..4 road ஜங்ஷன் அது..  அங்குமிங்கும் ஆண்களும் பெண்களும் சார்சாரையாய் சென்று கொண்டிருந்தார்கள். ஆண்களில் பெரும்பாலானோர் ஷர்ட் பான்ட் அணித்து மேல் ஒரு ID card அணிதிருன்தனர்.. பெண்கள் ஒரு sweater  போட்டு அதன் மேலே துப்பட்டாவை அணிந்திருந்தனர்.தனியே நின்றிருந்த ஆனந்துக்கு ஒரு கை டீயும் மற்றொரு கை சிகரட்டும் கதகதப்பூட்டி கொண்டிருந்தன. பெங்களூருவின் அழகை ரசித்து கொண்டிருந்தவன் கண்களில் வெண்திரை பணியை தாண்டி அவன் நண்பன் நகு வந்து கொண்டிருப்பது புலப்பட்டது..

"வா டா.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"

"இல்ல நகு, ஒரு 15 நிமிஷம் தான் இருக்கும், எப்படி இருக்க? வேலை லாம் எப்டி போது?"

"நல்லார்க்கேன் டா.. வேலை போகுது.. அப்புறம் என்ன? சாப்டியா? நா சாப்டேன்..போகும் போது எங்கயாச்சும் உனக்கு வாங்கிட்டு போய்டலாம்"

இதை அவன் சற்றும் எதிர் பார்கவில்லை.. சரி இவனுக்கு வேறு எதாவது வேலை இருந்துருக்கும் என நினைத்துகொண்டு அவன் வண்டியில் அமர்ந்து சென்றான். 

"என்ன டா இங்க ரோடே போட மாட்டனுகளா? இப்படி குண்டும் குழியுமா இருக்கு?"

"பெங்களூர் வெளில பார்க்க தாண்டா ஷோவா இருக்கும்..உள்ளுக்க இப்படி தான். நாய் பொழப்பா இருக்கும்."

"புரியுது புரியுது.. செருப்ப இங்கயே கலட்டி விடவா... உள்ள விடவா...
ஹ்ம்ம். நல்லாருக்கு டா வீடு.. ஒருத்தனுக்கு சரியா இருக்கும்.. எவ்ளோ ரெண்ட்?

பரஸ்பர விசாரிப்புகள்.. கல்லூரி புரளிகள்.. இப்படி நெறைய கதைகள் பேசி பேசி ஒருத்தர்கொருத்தர் பற்றி பேச ஆரம்பித்தார்கள்..

"டே நகு.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. பேறு ஸ்வேதா.. 

"காதல் - அவளும் அவள் சார்ந்த இடமும்; எப்படி?"

"முடில டா.. எப்படி டா? காதலிக்க ஆரமிச்ச்சவுடன் கவித எழுதறீங்க?"

"இன்னொன்னு கேளு .. 
முக்காலத்தையும் உணர்த்துமெனில் காதல் கூட ஒரு வினையெச்சம் தான்"

"அப்போ பொண்டாட்டிங்க?"

"அவங்க ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் "; ஹ ஹா ஹா ..

"ஹ ஹா ஹ ஹ ஹா ,  "எப்படி டா பழக்கம்? எங்க பார்த்த?"

""train ல தான் மொதமொத பார்த்தேன்.. நல்ல அழகு.. சென்னை ல வொர்க் பண்றா.. "

"""டே train ல பார்த்த உடனே லவ் பண்ணுதுனா, எனக்கு இது சரியா படல.. எதுக்கும் ரொம்ப சீரியசா இருக்காத.. பார்த்து டீல் பண்ணிக்கோ"

இந்த பதிலை நிச்சயம் ஆனந்த் எதிர்பார்க்கவில்லை. இவனிடம் இனி தன காதல் அனுபவத்தை சொல்வது பயனில்லை என முடித்து விட்டான்..

மறு நாள் காலை:

"சரி நகு, நான் கிளம்புறேன்.. சென்னை வா ஒரு weekend .. உனக்கும் ஒரு change ஆ இருக்கும்.. bye da .. TC."

நிகழ் காலம்:

கிர்ர்..கிர்ர்ர்..என அழைப்பு மணி சற்றே கண்ணயர்ந்த ஆனந்தை எழுப்ப.. யார் என பார்க்க.. கதவை திறந்தவனுக்கு அங்கே ஒரு அதிர்ர்ச்சி காத்திருந்தது..

"can I come in?" இனிய குரலில் குதிரை வால் பின்னியிருந்த ஒரு பெண், இவனது அனுமதி கோரி வெளியே நின்றிருந்தால்... ஆம் அவள் யது நந்தினி என தனை நேற்றிரவு அறிமுக படுத்திகொண்ட அதே பெண் தான்..

"ப்ளீஸ் கம் இன்" 

"தேங்க்ஸ்..How was ur day?" 

"yeah.. de day was quite good.. but you .. wr wr u this entire day? u knw wt?? I am in a problem.. i need ur help.." என இவன் தட்டு தடுமாறி பேசுவதற்குள், இடை மறித்தவள் ..

"u seem to be restless? R u ok? என வினவிக்கொண்டே தன கம்மலை சரி செய்து விட்டாள்.

"Yeah I am ok.. Lil Tired.. but otherwise.. things are..naa naa normal".. என தொண்டை எச்சில்லை விழுங்கினான்..

"Fine then! I shall take leave, Don Forget,, u promised for a dinner" கண் சிமிட்டு விட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் சென்றால்.

இவள் யார்? எதற்காக என்னிடம் இப்படி ஒரு நாடகத்தை ஆடுகிறாள் என குழம்பியவன் . கண நேரத்தில் உதித்த யோசனையால் அவளை கூபிடலானான்..."ம்ரிது ..ம்ரிது ..ம்ரிது மஞ்சரி.." என ஆனந்த் அழைக்க, வாசல் அருகே சென்று கொண்டிருந்தவள், மெதுவாக திரும்பி "ஆனந்த், எதாவது சொன்னிங்களா? என வினவ.. "Nothing..நான் உங்கள கூப்டு பார்த்தேன்"

"அதுக்கு, நீங்க யது.. யது நந்தினி னு கூப்டனும்.. நைட் தான சொன்னேன்.. அதுக்குள்ள என் பேர மறந்துட்டிங்களா? என்று கூறி சென்றாள்..

அப்போது வந்த நகு, ஒரு பெண் ஆனந்தை பார்த்து செல்வதை பார்த்தான்.. மிக பரிச்ச்சயம்கிய ஒரு உருவமாக தெஇயவஈ வேக வேகமாக சென்று பார்த்த அவனுக்கு ஆச்சரியம் ஆட்டுக்கல் போல் அமர்ந்திருந்தது..

"டே ஆனந்த்! இந்த பொண்ண எப்டி டா உனக்கு தெரியும்? அவ எதுக்கு இங்க வந்துட்டு போறா?"

"நகு, என்ன சொல்ற.. ம்ரிது மஞ்சரிய உனக்கு தெரியுமா? எப்டி டா? நான் சொல்லிடு இருந்த பொண்ணு இவ தான்"

"என்னது? என்ன டா ஒளர்ர? அவ பேறு யது நந்தினி டா!!!!

தொடரும் ...

செவ்வாய், டிசம்பர் 17, 2013

இதெல்லாம் ஒரு நாவலா? - பகுதி 2

'ஆனந்த் , ஆனந்த்...  உன்ன  தான்  கேக்குறேன் .. யாரு  இந்த பொண்ணு ? இவளுக்கு என் இப்படி ப்ளீட் ஆகுது?.. இவள  முன்னாலயே உனக்கு தெரியுமா?...' என்று கேள்விகளை ஸ்வேதா  அடுக்கி கொண்டே போக..பதில் ஏதும் கூறாமல் ஆனந்த் ம்ரிது மஞ்சரியை கு first aid செய்து கொண்டிருந்தான்..

"ஏன் சார், இத்தன பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்களே யாராச்சும் இவங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடாதா?"

" தம்பி உனக்கு வேண்டின பொண்ணுனா, நீ கூட்டிட்டு போப்பா .. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு..இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா?.." என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து 40  வயது மதிக்க தக்க அம்மா கூற, அதை இடை மறித்து ஸ்வேதா "அப்புறம் ஏங்க ? நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?..உங்களுக்கு அத்தனை வேலை இருந்த அத பார்க்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மனசாட்சியே இல்லாம வாழறதுக்கு நீங்கெல்லாம் காரணம் தேடி வெச்சுட்டு இருங்க.. ஆனந்த் வா நம்ம அவல ஹோச்பிடல் கூட்டிட்டு போலாம்"

Nimhans Hospital, 12 30 am: 


"Doctor. Hos is she now?"

"Nothing to worry Msiter. She is perfectly alright! அப்புறம் நன் குடுத்துருக்க medicines லாம் கரெக்டா டைம் கு குடுத்துருங்க..2 வாரம் கழிச்சு review வெச்சுக்கலாம்.. And one more thing, ask her not to travel for next two weeks. நான் ஒரு medicine குடுத்துருக்கேன் .. ஏதாவது காயம் பட்டா blood ப்ளீடிங் நிக்காது" என்று சொல்லிகொண்டே அடுத்த patient ஐ  பார்க்க டாக்டர் செல்ல, அருகே இருந்த நர்ஸ்.. இப்போலாம் பொண்ணுங்க அவங்க parents கூட ஹோச்பிடல் வர்றது இல்ல.. boy friends மட்டும் தன வராங்க என்று முனகியவாறு அங்கிருந்து  சென்றுவிட்டார்கள்.

"Take good care of your heath mridhu, will leave"

"ஆனந்த், ஒரு நிமிஷம்.. Thanks a lot!" நான் மடிவாலா தான் போறேன் ..I ll leave on my own."

Nimanhs Hospital..Bangalore ல  City centre ல இருக்க neuro speciality hospital. சிட்டி கு நடுவுல அவ்ளோ பெரிய hospital யாரும் யோசிச்சு கூட பார்க்க முடியாது. சுத்திலும் பெரிய பெரிய மரம், வெவ்வேறு விதமான மனிதர்கள் வித்தியாசமான நோய்கள் னு .. அந்த இடம் தனி உலகமா இருந்தது.. ஆனந்த் கு என்னமோ அந்த இடம் ஏற்கெனவே வந்து போன இடம் மாறியே இருந்தது.ஒரு வேலை இது தனது பிரம்மை யா இருக்கும்னு தன நினைப்பை மாற்றி கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டான். 

"Do you want to continue the transaction?" "No" என type செய்து விட்டு ATM card ஐ எடுத்துட்டு வெளில வந்தவன்  ஸ்வேதாவை நோக்கி.."என்னனு தெர்ல ஸ்வேதா.. இங்க ஏற்கெனவே வந்த மாறியே இருக்கு"

"என்னடா சொல்ற? நீ பெங்களூர் கே மூணு நாலாவது தடவையா தான வர்ர? அப்படி இருக்க இங்க எப்படி வந்திருப்ப?"

"தெர்ல ஸ்வேதா, எனக்கு அப்படி தான் தோணுது. நீ வேனும்ன பாரு இந்த ATM தாண்டினவுடனே ரைட் ல ஒரு கான்டீன் இருக்கும்.. அப்படி மட்டும் இருந்த கண்டிப்பா நன் இங்க வந்துருக்கேன்.."

"அடிங்க..யார்ட உன் டகால்டி வேலை காற்றை..ஆமா அந்த கான்டீன தாண்டின உடனே Research Lab வரும்.."

"Exactly ! உனக்கு எப்படி தெரியும்?"

"ஹ்ம்ம்.. SIGN BOARD பார்த்தா, யாருக்கு வேணும்னாலும் தெரியும்.." என்று சிரித்து ஊகொண்டேகொண்டே அவனை இவள் அடிக்க..இருவரும் சிரித்து கொண்டே அங்கிறுந்து வெளியே வந்தனர்.

"உனக்கு எத்தனை மணிக்கு marriage function ? - ஸ்வேதா 

"evening 6 கு அப்புறம் தான்..gift வேற இன்னும் வாங்கல ..இந்த குழப்பம் வேற என்னனமோ பணுது... நான் போய் கொஞ்ச நேரம் ரரெஸ்ட் எடுக்கட்டுமா?"

"ஏய்..நான் இங்க வந்ததே உனக்கா தான்..நீ போய் தூங்கின நான் என்ன பண்ண? பக்கத்துல தான forum mall இருக்கு? அங்க போய் gift வாங்கிட்டு லஞ்ச் முடிச்சுட்டு போலாம்.. நான் அங்கிருந்து என் friend ஓட PG கு போய்டுறேன்.. நீ ரூம் போய்டு. என்ன டீல் ஓகே வா?

"ஏஷ்டு ஆகிதே?"

"மீடேரல்லி நோடு குரு! 80 Rs"

"இங்க மாறி நம்ம சென்னைலயும் மீட்டர் சிஸ்டம் போட்ட ரொம்ப வசதியா இருக்கும் இல்ல..நாய்ங்க .. நல்லா கொள்ளை அடிக்குறாணுங்க.." என்று கூறி கொண்டே தன பர்சிலிருந்து 100 ருபாய் தாளை நீட்டினான்..

"ஸ்வேதா, நீ போய் Gift செலக்ட் பண்ணிட்டு இரு.. நான பின்னால இருக்க செகண்ட் ஹண்ட் புக் கடைல கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு வரேன்.."

"சரி சீக்கிரம்! 15 mins மேல எடுத்த நான் அங்க வந்துடுவேன்.." என தன டாப்ஸ் ஐ சரி செய்தவாரு உள்ளே சென்றாள்.

ஸ்வேதா வின் மூடாத வாயும் ஓரிடத்தில் நிற்காத கால்களையும்  ரசித்து கொண்டே பின்னிருக்கும் புத்தக கடைக்கு சென்றான். சிகப்பு வண்ண அட்டையில் இரண்டு நாடுகளில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் கை குலுக்கி கொன்ன்டிருப்பது போன்று அச்சிடப்பட்டு "TWO STATES" என தலைப்பிடபட்டிருந்தது. அந்த புத்தகத்தை ஸ்வேதாவின் பிறந்த தினத்தன்று அவளுக்கு பரிசளிக்கவே வாங்கி கொண்டிருந்தான்.

ஸ்வேதா வை பற்றி ..

குறும்புகளின் குடிலாய், அபிநயங்களின் அரண்மனையாய் ஆணின் கற்பனிக்கு சற்றும் குறை மிகை இல்லா வசீகரத்தை தன்னுள் கொண்டவள். கோயம்புத்தூர் சொந்த ஊர் என்பதாலோ என்னவோ அவள் வாய் மட்டும் மூடவே மூடாது. "ஐயோ அவளா? சரியான வாயாடி ஆச்சே! என்று அவள் பெயரை கேட்ட மாத்திரத்தில் மக்கள் கூறும் அழகு ராட்சசி. ச்வேதவை ஆனந்த் ஒரு ரயில் பயணத்தில் தான் சந்தித்தான்.இத்தனை நாள் புரியாத "அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால்" காப்பியத்தை ஒரு நொடியில் புரிய வைத்தவள். இன்றோடு அவன் அவளை சந்தித்து ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகி விட்டன.. அனால் அவளுக்கு மட்டும் ஏனோ வயது குறைந்து கொண்டே போனது..


புத்தகத்தை வங்கி தன் பையில் மறைத்து வைத்து கொண்டு ஸ்வேதா வை நோக்கி சென்றான். "எல்வ்ளோ நேரம்? நீ வரலானா நானே அங்க வந்துருப்பேன்..நான் செலக்ட் பண்ணின கிபிட் நல்ல இருக்கா?" பதிலேதும் பேசாமல் அவளை பார்த்து சிரித்து கொண்டே அதற்குரிய பணத்தை கட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"ஆஹ்ன்..சொல்லுங்கப்பா..நான் நேத்து evening சே வந்துட்டேன்.. ஆமா ஆமா.. நான் போன் பண்ணினேன்.. அவன் தான் என் ரூம் கு வந்துருக்கான்.. சாயந்திரம் 6 மணிக்கு மேல தான்பா function.ஆமா நாளைக்கும் நாளாம் நாளைக்கும் இங்க தன இருக்கபோறேன்.."

"ஆமா சனி ஞாயிறு இல்ல.. சண்டே evening தான் கிளம்புறேன்.. சசி அண்ணன் வீட்டுக்கா? டைம் இருந்த போறேன். ஆஹ்ம் .. சாப்டுட்டு தான் இருக்கேன்..சரிங்கப்பா கிளம்பும் பொது கூப்டுரேன்" என தன தந்தையின் அழைப்பிற்கு பதில் அளித்து விட்டு தன நண்பன் நகுவிற்கு போன் செய்தான்..

"டேய் எங்க டா இருக்க?  எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா! நைட் நீ இங்க வர்றியா? 

"இன்னிக்கி நைட் நான் நித்ய கூட படத்துக்கு போறேன்.. ஒன்னு பண்றேன்.. போயிட்டு நான் அங்கிருந்து நேர வந்துர்றேன்.. இல்ல இல்ல நன் சாப்ட்டு தான் வருவேன்.. நீ சாப்ட்டு படு" என் கூறிவிட்டு நகு தன் வேலையை தொடர்ந்தான்..

போன் ஐ வைத்து விட்டு திரும்பிய பொது தான் ஆனந்த் அந்த உறைய வைக்கும் காட்சியை பார்த்தான்.. ஸ்வேதா உம ஂம்ரிது மஞ்சரியும் சற்று தொலைவில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்..

தொடரும் ...






Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...