ஒரு நிமிஷம்... ஒரே ஒரு நிமிஷம்.. வேக வேகமா ஸ்க்ரோல் பண்ற உங்க சில நிமிடங்களை ஒதுக்கியதற்கு நன்றி.. அது ஒன்னும் இல்லங்க.. வழக்கம் போல தான்.. படத்துக்கு போயிட்டு வந்தேன்... பொதுவாவே, புரட்சி படம், இல்லனா ஏழைகளுக்காக போராடுற படத்தெல்லாம் பார்த்தா ஒரு உணர்வு பிறக்குமே... அதே தான்...
தமிழனுக்கு சினிமா வும் இந்த உணர்வும் ஒன்னோட ஒன்னு கலந்து போய்டுச்சுங்க.. என்ன, எல்லா படத்த பாக்கும்போதும் நம்ம விமர்சனம் எழுதாலாம்னு தோனும். அந்த ஆவல் தியேட்டர விட்டு வெளில வரும்போது "மச்சி, எங்க சாப்டலாம்னு ?" கேட்டதும் பொரிக்கும் போது இருக்க பாப்கார்ன் வாசனை, வாங்கினதும் காணாம போய்டுமே அந்த மாரி தான் எப்பொவும் நடக்கும். இன்னைக்கு, தனியா படத்துக்கு போனதாலோ இல்ல போறதுக்கு முன்னால நல்லா மீன் குழம்பும் தோசையும் அடிச்சு நவுத்தனதாலையோ எழுதலாம்னு வீட்டுக்கு வர்ற வரை தாக்கு பிடிச்சிருக்கு..
விமரசனத்துக்கு முன்னால, என்னையும் எழுத சொல்லி, அதையும் படிக்குற என்னோட சில நண்பர்கள் " GIFTA , ஜக்தேஷ், சரத் அண்ட் தயாநிதி அவர்களுக்கு இதை சமர்பிக்கிறேன்.
இப்போ, படத்துக்கு போவோம்.. ஹிந்தி படத்தோட தழுவல எடுக்கப்பட்ட படம்.. ஒரு எதுக்கும் உதவாத ஒரு கிராமத்து வக்கீல் சென்னை வந்து எப்படி தன்ன தக்க வெச்சுக்கரான்றது தான் படத்தோட ஒன்லைனெர். சல்மான் கார் accident கேச மையமா வச்சு கதை நகருது.. நடுவுல, சின்ன பையன் ஒருத்தன் ஆபரேசன் பண்ணின கேச காமெடிக்காக உள்ள கொண்டு வந்தது, நம்ம எவ்ளோ விஷயத்த சாதாரணமா மறக்குறோம் னு பொட்ல அடிச்சாப்ல சொல்லுது..
படத்தோட பலமே, வக்கீல் based கதை னா, கிளைமாக்ஸ்ல மாறி மாறி வாதம் பண்ணுவாங்க..."எதிர் தரப்பு வக்கீல்கு இது தெரியாதது வேடிக்கையா இருக்கு யுவர் ஆனர்!" னு சொல்லிட்டு நக்கலா சிரிக்குறதும்.. "குற்றம் சாட்ட பட்டிருக்கும் இந்த ராஜா சமூகத்தில் பெரிய அந்தஸ்தை உடையவர்" னு பழைய dialogues இல்லாததே பாராட்டுக்கு உரியது தான்.. குறிப்பாக பிரகாஷ் ராஜ்கும் உதயநிதி கும் கோர்ட்ல நடக்குற வாய் தகறாறும், அதன் பின்னர் ஜட்ஜ் அவர்களை அழைத்து பேசுவதும், நடைமுறை..
தத்து பித்து தனமாக, "குற்றவாளியவே அவன் வாயால குற்றட்தை ஒத்துக்க வைக்க, நான் நடத்திய நாடகம் தான் இது யுவர் ஆனார்" னு வக்கீல்கள் Mime பண்ணாமல் இருந்ததற்கு ஒரு பெரிய நன்றி..கிளைமாக்ஸ் காட்சியில தீர்ப்பு சொல்ல நம்மளே ஜட்ஜ் ஆகி அலசி ஆராயும் போது, proper ஆன evidence இல்லாமலும் அதே சமையம் கிடைத்த அழிக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து கொண்டு நியாயமான தீர்பா ரசிகன ஏத்துக்க வெச்சது அம்சம்,, பிரகாஷ் ராஜ் கோர்ட் ல அலம்பல் விற்ற சீன்ல ராதாரவி [ஜட்ஜ்] எழுந்து "ஒக்காரிய இல்ல ..ஒழுங்கா ஒக்காரு"னு கைல கிடச்சத எடுத்து அடிக்க வர்ற சீன் லாம் கைதட்டல்...
பிரகாஷ் ராஜ் நடிப்பு தனிய பாராட்ட ஒன்னும் இல்ல.. அவர மனசுல வெச்சு தான் எழுதிருக்கனும்.. ராதாரவி வர்ற சீன் எல்லாமே நெஞ்சுக்கு மேல தான் சாட்.. ஜட்ஜ் இல்ல.. அப்படி தான காட்ட முடியும்.. ஆனா மனுஷன், bodylanguage ஏ காட்ட முடியலைனாலும் அவரோட நடிப்பு திறமை.. அவருக்கு சினிமா ல இருக்க அனுபவத்தையும் அவரோட முதிர்ச்சியையும் காட்டுது.. சும்மா மிரட்டிருகாப்ள..நயன்தாராவையும் சந்தானத்தையும் சரண்யாவையும் நம்பி இருந்த உதயநிதிக்கு இது புது முயற்சி, பயபுள்ள பாஸ் ஆய்ட்டான்னு தான் சொல்லணும்... கிளைமாக்ஸ் ல பிரகாஷ்ராஜ் ஏத்த இரக்கத்தோட அவ்ளோ பெரிய dilaogue பேசுனதும், "போச்சுடா! பையன் எப்படி நடிக்க போறான்னு" யோசிச்சிட்டு இருக்கும் போது, சாதாரணமா வந்து தேவையான அளவுக்கு நடிச்சிட்டு போய்டுராப்ள.. இது வரைக்கும் உதயநிதி படம் லாம் பாத்துட்டு வெளில வரும்போது உதயநிதி மட்டும் தான் ஞாபகத்துக்கு வருவான்.. ஆனா மொத முறையா "சக்தி"ய ஞாபகம் வெச்சுக்க வெச்சிருகாப்ல...வாழ்த்துக்கள்!
Special mention: கடைசியா சாட்சி சொல்ற supporting artist கிளாஸ்.விவேக் காமெடி is a cheese toping on the pizza. ஐஸ்வர்யா, continue choosing such roles.
எல்லாம் .சரி.. தம்பி உதயநிதி! சினிமால நேர்மை காக ஏழைகளுக்காக பாடு படுற நீங்க உங்க அப்பாகிட்டயும் தாத்தாகிட்டயும் சொல்லி நல்லா மாறி வாழ கூடாது?>.. நீங்க இப்படி நடிக்குறத பார்க்கவே இவ்ளோ .நல்லாருக்கே.. உண்மைலயே அப்படி இருந்தா..எப்படி இருக்கும்?
"முடியட்டும் விடியட்டும்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக