செவ்வாய், ஜூன் 01, 2010

I DOn LOVE STORY PART 2

May 1st 2008

“am coming Chennai on 5th. Will be there for 15 days” I joined in the other company, which gave me a better pay.

“Wow! But am out of station till 10th, will meet u after that”

“what de f**k? என்ன திடீர் பிளான்?., சொல்லவே இல்ல!”

“Sorry! I had to go and will be back soon. நான் out of station ah இருந்தாலும் உன் கூட தன இருப்பேன் J

இதுக்கு மேல என்ன சொல்ல முடியும். அப்படியே flat ஆகிட்டேன்.

நாட்கள எண்ணிட்டு இருப்பேன்”

-----------------------------------------------------------------------------------------------------------------------------

May 07, 2008: 7 pm

XXXX restaurant. Thiruvanmiyur

“ஹே இனியா, பத்து நிமிஷத்துல வந்துர்றேன்..சாரி சாரி!”

“பாத்து நிமிஷம் ஆகி, பதினஞ்சு நிமிஷம் ஆச்சு! இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.? நான் எதாவது ஆர்டர் பண்ணட்டுமா?”

“நீ ஆர்டர் பண்ணு! நான் இன்னும் 5 நிம்சத்துல அங்க இருப்பேன்! மறுபடியும் போன் பண்ணி காசு வேஸ்ட் பண்ணாத!”

நான் ரெண்டு பேர் கு ஆர்டர் பண்ணினதா பார்த்து, waiter என்ன மேலயும் கீழையும் பார்த்தான். ‘இதெல்லாம் ஒரு பொழப்ப டா?’ னு அவனோட mind voice சொன்னது எனக்கு கேட்டது.

“டேய், எப்படி இருக்க? என்ன இப்படி குண்டு ஆகிட்ட?”

“அட சாமிகள, பாகுரவங்கல்லாம் இப்படியே சொன்னா நான் என்ன பண்றது? நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? ஏன் பஸ் ah, நீங்கெல்லாம் தள்ளிட்டு வந்திங்களா?

“Office ல வேல டா, கிளம்புற நேரத்துல தான் இந்த TL வந்து எதாவது வேலை குடுப்பான்” பேசிட்டு இருக்கும் போதே, அவளோட செல் போன் சிணுங்கியது.

“ஒரு நிமிஷம், அவரு கூபிடறாரு! ஹ்ம்ம் சொல்லுங்க.. இல்லை இன்னைக்கு ஹோட்டல் ல சாப்ட போறேன்..இனியன் இருக்கான் இல்ல, அவன் சென்னை வந்துருக்கான்..இன்னைக்கு அவனோட டின்னெர்.. சரிங்க நான் வீட்டுக்கு போயிட்டு போன் பண்றேன்”

“அப்புறம் சொல்லு இனியா, வேற என்ன விசேசம்? அப்பா அம்மா ல்லாம் எப்படி இருக்காந்க?”

“ஹ்ம்ம்..உன் ஆத்துக்காரர் எப்படி இருக்காரு? எதாவது தேறுவர?”

“அவருகென்ன? அவர தான் ரொம்ப மிஸ் பண்றேன்..அவருக்கும் சீக்கிரம் இங்க ஒரு வேலை கிடச்ச இங்கயே செட்டில் ஆகிடுவோம்! பார்க்கலாம்”

“சரி சாப்டலாம? என்னோட taste எப்படி இருக்குன்னு சொல்லு!” பேசிட்டே எடுத்து அவளோட plate ல serve பண்ணினேன்.

“நல்ல taste! Good choice! ஒழுங்கா உண்மைய சொல்லு. இங்க நீ வந்துருக்க தான? ஒரு வருசமா சென்னை ல இருக்க எனக்கே இந்த restaurant தெரியாது….

“இல்ல பிரிஎந்து கிட்ட கேட்டேன்..அவன் தான் சொன்னான்!” பேசிட்டே இருந்தாலும் என் கண்ணும் கையும் மொபைல் ah பார்கறதும் தேட்றதவுமா இருந்தது.

“யார் கிட்ட இருந்தாவது போன் எதிர் பாத்துட்டு இருக்கியா? இல்லன்னு மட்டும் சொல்லாத..நல்லா தெரயுது..என்னடா girl friend ah? அத்தைக்கு theriuma?” அவ பாட்டுக்கு அடுத்து அடுத்து கண்டுபுடிசிட்டாலே னு கடியா இருந்தது..

நெஞ்சை பூ போல் கொய்தவலே..என்னை எதோ செய்தவளே..

ஹ்ம்ம்..ஸ்வேதா தான் கால் பண்றா..

“டேய் யாரு டா அது, ரிங்க்டோன் செம ரொமாண்டிக் ah வெச்சிருக்க..ஸ்வீட் ஹார்ட் னு வேற சாவே பண்ணி வெச்சுருக்க.என்ன டா நடக்குது., குற்றம்! நடந்தது என்ன?”

“யே.. இரு சொல்றேன்..! ‘ஹலோ, ஹ்ம்ம் நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க.,சாப்டுட்டு இருக்கேன்..அதே restaurant தான்.. ஒரு surprise friend கூட இருக்கேன்., பேசுறியா’? “ யே..இந்தா உன் பேர் சொல்லிட்டு பேசு.” போன் அவ கிட்ட கொடுதுத்தேன்.

“இல்ல கடைசி வரைக்கும் எனக்கு பேர் இல்லன்னு சொல்லிட்டு வெச்சுருவேன்..ஆள பரு..போன் ah குடு”.. ‘ஹலோ, நான் இலக்கியா பேசுறேன்..எப்படி இருக்கிங்க?’..oh! nice name., உங்க கூட தான் இங்க வந்தானா.? என் கிட்ட friend சொன்னதா சொன்னான்..நல்லா மாட்டிகிட்டான்..உங்க பேர என்னனு save பண்ணி வெச்சுருக்கன்னு அப்புறமா கேட்டுகோங்க?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீங்களாச்சு அவனாச்சு...சரி, நாம ஒரு நாள் மீட் பண்ணுவோம்..பாய்..அவன் ட தரேன்..டேக் கேர்!”

“ஹ்ம்ம்..சுரே! நிச்சயமா ரெண்டு பேரும் மீட் பண்ணுவிங்க..vekattuma? நான் அப்புறம் பேசுறேன்..பாய்”

“இனியா! உண்மைய சொல்லு., அந்த பொண்ண லவ் பண்ற தான.?”

“இப்போதைக்கு இல்ல..future ல என்ன ஆகும்னு தெரியல”

“போதும் நிறுத்து! லவ் பண்ணாம தான், sweetheart னு save பண்ணி vechurukkiya? இன்பாக்ஸ் full ah ஸ்வேதா அனுப்பின மெசேஜ் தான் இருக்கு. லவ் ah ஒத்துக்க தைரியம் இல்லைனா, அவல விட்ரு..தேவை இல்லாம அவ future ah ஸ்பாயில் பண்ணாத”

“இலக்கியா! ஒரு நிமிஷம்.. என்னால இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியல..அதுக்காக நீ சொன்ன மாரி தைரியம் இல்லன்னு லாம் அர்த்தம் கிடையாது..மனசையும் தாண்டி புத்தி கிட்டயும் கொஞ்சம் கேட்டு செயல் பட வேண்டிய விஷயம்..” கன்னத்துல ஒட்டிருந்த ஐஸ் கிரீம் தொடச்சுட்டே, நான் சொல்றத கேட்டுட்டு இருந்தா..

“சிம்பிள் ah சொல்றேன்., அவ என்ன லவ் பண்ணாம நான் மட்டும் பண்ணினேன்னு தெறிஞ்ச, அப்புறம் என்னால., அத தாங்க முடியாது”.. ‘எங்க ரெண்டு பேருக்கும் நடவுல இப்போ ஒரு பீல் இருக்கே, friendukkum மேல loverukkum கீழ..அது நல்லா இருக்கு..நான் இத ஸ்பாயில் பண்ணிக்க விரும்பல’

“உன்ன சொல்லி தப்பில..நெரைய தமிழ் சினிமா பார்த்து கேட்டு போயிருக்க..எதோ, கடைசியா சிரிச்சிகுட்டே familyoda போடோக்கு போஸே குடு..அத விட்டுட்டு., ‘இனியன் அவளை கண்ணில் சுமந்தான்., இனி அவள் நினைவுகளை நெஞ்சில் சுமப்பான் னு’ டைட்டில் கார்டு போற்றாத”

“ஹ ஹ ஹ..நீயும் வர வர காமெடி பண்ண ட்ரை பண்ற! பரவா இல்ல! நல்லா தான் பண்ற”

“பில் pay pannitaya? கிளம்பலாம்.., டைம் ஆச்சு”

to be contnd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...